செய்திகள்
கோப்புப்படம்

வேகமெடுக்கும் வைரஸ் பரவல் - அசாமில் தடுப்பூசிக்கு பற்றாக்குறை ஏற்படும் அபாயம்

Published On 2021-04-10 20:49 GMT   |   Update On 2021-04-10 20:49 GMT
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ள நிலையில் அனைத்து மாநிலங்களும் தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்தியுள்ளன.
கவுகாத்தி:

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ள நிலையில் அனைத்து மாநிலங்களும் தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்தியுள்ளன.

இந்த நிலையில் அசாம் மாநிலத்தில் கொரோனா தடுப்பூசிகளுக்கு பற்றாக்குறை ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

கொரோனா வைரஸ் மீண்டும் வேகமாக பரவுவதால் எழுந்துள்ள அச்சம் காரணமாக அதிகமான மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வருவதால் அடுத்து வரும் நாட்களில் தடுப்பூசிக்கு பற்றாக்குறை ஏற்படும் சூழல் இருப்பதாக மூத்த அரசு அதிகாரி ஒருவர் கூறினார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “தற்போது மாநிலத்தில் 2 லட்சத்து 70 ஆயிரம் தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளன. வெள்ளிக்கிழமை நிலவரப்படி நாளொன்றுக்கு தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களின் எண்ணிக்கை 55 ஆயிரத்தை எட்டியுள்ளது.‌ இதே விகிதத்தில் சென்றால் 2 அல்லது 3 நாட்களில் கையிருப்பு தீர்ந்துவிடும்” என கூறினார்.

வியாழக்கிழமை நிலவரப்படி அசாமில் இதுவரை 11 லட்சத்து 80 ஆயிரம் பேர் கொரோனா தடுப்பூசியின் முதல் டோசையும், 2 லட்சத்து 23 ஆயிரம் பேர் கொரோனா தடுப்பூசியின் 2 டோஸ்களையும் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News