சமையல்
சோயா பீன்ஸ் மசாலா சுண்டல்

புரோட்டின் நிறைந்த சோயா பீன்ஸ் மசாலா சுண்டல்

Published On 2022-02-23 05:32 GMT   |   Update On 2022-02-23 05:32 GMT
சிக்கன், மட்டன், பால், முட்டையில் எந்த அளவுக்கு புரோட்டின் இருக்கிறதோ அதே அளவு புரோட்டின் சோயா பீன்ஸில் இருக்கிறது என்று உணவு நிபுணர்கள் கூறுகிறார்கள்.
தேவையான பொருட்கள் :

வெள்ளை சோயா பீன்ஸ் - ஒரு கப்,
இஞ்சி பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்,
பட்டை - சிறிய துண்டு,
கிராம்பு, ஏலக்காய் - தலா ஒன்று,
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்,
தனியாத்தூள் - அரை டீஸ்பூன்,
கறிவேப்பிலை, புதினா - சிறிதளவு,
தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்,
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:

சோயா பீன்ஸை முதல் நாளே ஊற வைக்கவும். மறுநாள் குக்கரில் வேக வைக்கவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, ஏலக்காய், கிராம்பு தாளித்து... கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

அடுத்து அதில் வேக வைத்த சோயா பீன்ஸ், மிளகாய்த்தூள், தனியாத்தூள், உப்பு சேர்த்துக் கலந்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து மூடி வைக்கவும்.

சோயாபீன்சில் மசாலா நன்கு கலந்து தண்ணீர் முழுவதும் வற்றியவுடன் புதினா, தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

சத்துமிக்க மசாலா சோயாபீன்ஸ் சுண்டல் ரெடி!
Tags:    

Similar News