உள்ளூர் செய்திகள்
கூட்ட நெரிசல்

ராமநாதபுரம் பஸ்களில் கூட்ட நெரிசல்

Published On 2022-01-12 11:31 GMT   |   Update On 2022-01-12 11:31 GMT
ராமநாதபுரம் பஸ்களில் கூட்ட நெரிசலில் சிக்கி முதியவர்கள்&மாற்றுத்திறனாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
ராமநாதபுரம்

ராமநாதபுரம் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை மூலம் இயக்கப்படும் அனைத்து பஸ்களுமே மகளிர் கட்டணமின்றி இலவசமாக  பயணம் செய்யும் பஸ்களாக மாற்றப்பட்டு இயக்கப்படுகிறது. இதனால் அனைத்து நேரங்ளிலும் அனைத்து டவுன் பஸ்களிலும் மகளிர் கூட்டம் அலைமோதுகிறது. 

குறிப்பாக ராமநாதபுரம் அரண்மனையில் இருந்து பெரியபட்டிணம் மற்றும் அழகன்குளத்திற்கு தடம் எண்.4 மற்றும் தடம் எண்.19 ஆகியவற்றில் அளவுக்கதிகமாக மகளிர் கூட்டம் நிரம்பி காணப்படுகிறது.  இதனால் இந்த பஸ்களில் தினசரி பணிக்கு செல்லும் ஆண்கள், முதியவர்கள், மருத்துவமனைக்கு வரும் ஆண் நோயாளிகள், மாற்றுத்திறனாளிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். 

இந்த இரு வழித்தடங்களிலும் ஓடும் இந்த பஸ்களில் தினசரி முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள்  அவதிப்படுகின்றனர்.  எனவே ராமநாதபுரம் அரண்மனையில் இருந்து ஆண்களும் பயணம் செய் யும் வகையில் எல்.எஸ்.எஸ். அல்லது சிட்டி எக்ஸ்பிரஸ் பஸ்களை கூட்ட நேரங்களில் போதுமான அளவில் இயக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags:    

Similar News