செய்திகள்
தங்கம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.48 குறைவு

Published On 2021-04-10 06:58 GMT   |   Update On 2021-04-10 06:58 GMT
சென்னையில் இன்று காலை தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.48 குறைந்து, ரூ.34 ஆயிரத்து 992-க்கு விற்றது. கிராமுக்கு ரூ.6 குறைந்து ரூ. 4 ஆயிரத்து 374 ஆக உள்ளது.

சென்னை:

தங்கம் விலையில் சில நாட்களாக உயர்வு காணப்பட்டு வந்தது. கடந்த 2-ந் தேதி தங்கம் பவுன் ரூ. 34 ஆயிரத்தை தாண்டியது. அதன்பின் விலை உயர்ந்து கொண்டே இருந்ததால் நேற்று பவுன் மீண்டும் ரூ. 35 ஆயிரத்தை எட்டியது.

நேற்று பவுனுக்கு ரூ. 120 அதிகரித்து ரூ. 35 ஆயிரத்தை 40-க்கு விற்றது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை குறைந்ததால் பவுன் ரூ. 35 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. சென்னையில் இன்று காலை தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.48 குறைந்து ரூ. 34 ஆயிரத்து 992-க்கு விற்றது. கிராமுக்கு ரூ. 6 குறைந்து ரூ. 4 ஆயிரத்து 374 ஆக உள்ளது.

வெள்ளி கிலோவுக்கு ரூ. 100 அதிகரித்து ரூ. 71 ஆயிரத்து 700 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ. 71.70-க்கு விற்கிறது.

Tags:    

Similar News