செய்திகள்
காமராஜர் படத்திற்கு மரியாதை செலுத்திய விஜய் வசந்த் எம்.பி.

சென்னையில் காமராஜர் பிறந்த நாள் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற விஜய் வசந்த் எம்.பி.

Published On 2021-07-17 17:04 GMT   |   Update On 2021-07-17 17:04 GMT
காமராஜர் சிலைக்கு விஜய் வசந்த் எம்பி மாலை அணிவித்து காங்கிரஸ் கொடியை ஏற்றி துப்புரவு பணியாளர்களுக்கு அரிசி காய்கறிகள் உள்ளிட்ட நலத்திட்டங்களை வழங்கினார்.

பெருந்தலைவர் காமராஜரின் 109வது பிறந்த நாளையொட்டி தென் சென்னை மேற்கு வர்த்தக காங்கிரஸ் சார்பாகவும் வட சென்னை கிழக்கு வர்த்தக காங்கிரஸ் சார்பாகவும் நடைபெற்ற வெவ்வேறு நிகழ்ச்சிகளில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார் கன்னியாகுமாரி எம்பி விஜய் வசந்த். 

தென் சென்னை வர்த்தக காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற விழாவில் 119 மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரண பொருட்களையும் 119 பெண்களுக்கு புடவையும் வழங்கி, ஏழை எளிய மக்களுக்கு அன்னதானமும் வழங்கினார். 



அது போன்று வட சென்னை கிழக்கு வர்த்தக காங்கிரஸ் சார்பாக நடைபெற்ற விழாவில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து காங்கிரஸ் கொடியை ஏற்றி துப்புரவு பணியாளர்களுக்கு அரிசி காய்கறிகள் உள்ளிட்ட நலத்திட்டங்களை வழங்கினார். 



இவ்விழாவில் பேசிய விஜய் வசந்த், ‘பெருந்தலைவர் காமராஜர் குழந்தைகளின் கல்விக்காக பல்வேறு நல உதவிகளை செய்தார். அவரின் கனவை நினைவாக்க பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை நன்கு படிக்க வைக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார் இந்நிகழ்ச்சிகளில் வர்த்தக காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News