தொழில்நுட்பம்
போர்டிரானிக்ஸ் ஹார்மோனிக்ஸ் 230

புதிய நெக்பேண்ட் இயர்போன் அறிமுகம் செய்த போர்டிரானிக்ஸ்

Published On 2021-04-07 10:04 GMT   |   Update On 2021-04-07 10:04 GMT
நுகர்வோர் மின்சாதன பொருட்களை விற்பனை செய்யும் போர்டிரானிக்ஸ் பிராண்டு இந்திய சந்தையில் புது நெக்பேண்ட் இயர்போனை அறிமுகம் செய்தது.


போர்டிரானிக்ஸ் பிராண்டின் புதிய ஹார்மோனிக்ஸ் 230 வயர்லெஸ் ஸ்போர்ட்ஸ் நெக்பேண்ட் இயர்போன் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இது ஆக்டிவ் சிவிசி 8.0 நாய்ஸ் ரிடக்ஷன் தொழில்நுட்பம், 7 மணி நேர பேட்டரி பேக்கப், ப்ளூடூத் 5 மற்றும் பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது.

ஹார்மோனிக்ஸ் 230 வயர்லெஸ் ஹெட்செட் 10எம்எம் டிரைவர்களை கொண்டுள்ளது. இதில் உள்ள நாய்ஸ் ரிடக்ஷன் தொழில்நுட்பம் அழைப்புகளின் போது தெளிவான ஆடியோவை வழங்குகிறது. இயர்பட்களின் பின்புறம் காந்தம் உள்ளதால், அவை எளிதில் வைத்துக் கொள்ள முடியும். மேலும் சிலிகான் மூலம் உருவாக்கப்பட்டு இருப்பதால், இதன் எடை குறைவாக இருக்கிறது.



இதில் உள்ள 110 எம்ஏஹெச் பேட்டரி ஒருமுறை சார்ஜ் செய்தால் 7 மணி நேரத்திற்கு பயன்படுத்த முடியும். மேலும் இதில் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளதால், 5 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் ஒரு மணி நேரத்திற்கு பயன்படுத்தும் வசதி வழங்கப்படுகிறது. 

போர்டிரானிக்ஸ் ஹார்மோனிக்ஸ் 230 ப்ளூடூத் ஹெட்செட் பிளாக் மற்றும் புளூ என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1999 ஆகும். னினும், அமேசானில் இந்த இயர்போன் ரூ. 999 விலையிலும், ப்ளிப்கார்ட் தளத்தில் ரூ. 899 விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது.
Tags:    

Similar News