செய்திகள்
சிறப்பு ரெயில்

பயணிகள் வருகை குறைவு- 4 சிறப்பு ரெயில்கள் ரத்து

Published On 2021-05-04 04:28 GMT   |   Update On 2021-05-04 13:46 GMT
கேரள மாநிலம் கண்ணூர் - யஷ்வந்த்பூருக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில் நாளை முதல் முழுமையாக ரத்து செய்யப்பட உள்ளது.
சென்னை:

கொரோனா இரண்டாம் அலை தற்போது வேகம் எடுத்து வருகிறது. இதைத் தடுக்க பல்வேறு மாநிலங்களில் தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக, குறிப்பிட்ட சில சிறப்பு ரெயில்களில் பயணிப்போர் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. பயணிகள் வருகை சரிந்த ரெயில்களை ரெயில்வே நிர்வாகம் ரத்து செய்து வருகிறது. அந்த வகையில் 4 சிறப்பு ரெயில்களை ரெயில்வே நிர்வாகம் ரத்து செய்து அறிவித்துள்ளது.



கே.எஸ்.ஆர். பெங்களூரு- நாகர்கோவிலுக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில் (07235) மே 5-ம் தேதியில் இருந்து முழுமையாக ரத்து செய்யப்பட உள்ளது.

நாகர்கோவில்- கே.எஸ்.ஆர். பெங்களூருக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில் (07236) மே 6-ம் தேதியில் இருந்து முழுமையாக ரத்து செய்யப்பட உள்ளது.

கர்நாடக மாநிலம் யஷ்வந்த்பூர்- கண்ணூருக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில் (06537) இன்று முதல் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

கேரள மாநிலம் கண்ணூர் - யஷ்வந்த்பூருக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில் நாளை (5-ந் தேதி) முதல் முழுமையாக ரத்து செய்யப்பட உள்ளது.


Tags:    

Similar News