உள்ளூர் செய்திகள்
கோப்பு காட்சி.

களியக்காவிளை பகுதியில் சாலைசீரமைப்பு பணியை ஆய்வு செய்த அதிகாரிகள்

Published On 2022-01-11 10:32 GMT   |   Update On 2022-01-11 10:32 GMT
களியக்காவிளை பகுதியில் சாலை சீரமைப்பு பணியை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
நாகர்கோவில்:

கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரையிலான தேசிய நெடுஞ்சாலையில் குண்டும், குழியுமாக சேதமடைந்த பகுதிகள் சீரமைக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு சாலை சீரமைப்பு பணி திருத்துவபுரம் பகுதியில் நடந்தபோது தரமற்ற முறையில் சாலைப்பணி நடைபெறுவதாக புகார் தெரிவித்து சிலர் பணியை தடுத்து நிறுத்தினர்.

இதுபற்றிய தகவல் அறிந்த தேசிய நெடுஞ்சாலை நெல்லை கண்காணிப்பு பொறியாளர் பழனியப்பன், நெல்லை தரக்கட்டுப்பாட்டு அதிகாரி ஜெயப்பிரகாஷ் மற்றும் குமரி மாவட்ட தேசிய நெடுஞ்சாலை கோட்டப் பொறியாளர் ஜெகன்மோகன் ஆகியோர் நேற்று கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரையிலும் ஆய்வு செய்தனர். புகார் தெரிவிக்கப்பட்ட திருத்துவபுரம் பகுதியிலும் ஆய்வு செய்தனர்.

பின்னர் கோட்டப் பொறி யாளர் ஜெகன்மோகன் கூறும்போது, சாலை சீரமைப்பு பணி தரமான முறையில்தான் நடந்துள்ளது. இதை உயர் அதிகாரிகள் நெல்லையில் இருந்து வந்து தரப்பரிசோதனை செய்தனர். இதில் சாலை தரமாக அமைக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது என்றார்.

இது தொடர்பாக இந்த சாலைப்பணியின் ஒப்பந்ததாரர் கைலாஷ்குமார் கூறும்போது, அரசு நிர்ணயித்துள்ள தரத்தில் இந்த சாலைப்பணி செய்யப்பட் டுள்ளது. ஆனால் சிலர் வேண்டும் என்றே தவறான தகவலை பரப்பினர். இதனை யாரும் நம்ப வேண்டாம். இந்த சாலைப் பணியின் தரத்துக்கு நான் பொறுப்பு என்றார்.
Tags:    

Similar News