செய்திகள்
கொரோனா வைரஸ்

கொரோனா தொற்று கண்டறியப்பட்டதால் கொளத்தூர், எழும்பூர் தொகுதி தேர்தல் அதிகாரிகள் திடீர் மாற்றம்

Published On 2021-05-02 09:00 GMT   |   Update On 2021-05-02 09:00 GMT
கொளத்தூர் தொகுதி ஓட்டு எண்ணும் மையத்தில் அவருக்கு பதில் கண்ணன் என்பவர் தேர்தல் நடத்தும் அலுவலராக நியமிக்கப்பட்டார். புதிய அதிகாரி வந்தபிறகே ஓட்டு எண்ணும் பணி நடைபெற்றது.

சென்னை:

சட்டசபை தேர்தலில் ஓட்டு எண்ணும் மையங்களில் உள்ள தேர்தல் அதிகாரிகள் மற்றும் முகவர்கள் அனைவருக்கும் கடந்த 2 நாட்களுக்கு முன்பே கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு இருந்தது.

இதில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டவர்கள் ஓட்டு எண்ணும் மையத்தில் அனுமதிக்கப்படவில்லை. அதேபோல் சென்னையில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியான தங்கவேலுக்கு இன்று காலையில் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

இதைத்தொடர்ந்து கொளத்தூர் தொகுதி ஓட்டு எண்ணும் மையத்தில் அவருக்கு பதில் கண்ணன் என்பவர் தேர்தல் நடத்தும் அலுவலராக நியமிக்கப்பட்டார். புதிய அதிகாரி வந்தபிறகே ஓட்டு எண்ணும் பணி நடைபெற்றது.

இதேபோல் எழும்பூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து அவரும் மாற்றப்பட்டார். புதிய அதிகாரியாக லீலாவதி என்பவர் நியமிக்கப்பட்டார்.

Tags:    

Similar News