வழிபாடு
பிள்ளையார்பட்டி கோவில்

பிள்ளையார்பட்டி கோவிலில் தைப்பூசம் வரை பகல் முழுவதும் நடை திறப்பு

Published On 2021-12-11 06:56 GMT   |   Update On 2021-12-11 06:56 GMT
பிள்ளையார்பட்டியில் உள்ள பிரசித்தி பெற்ற கற்பகவிநாயகர் கோவிலில் தைப்பூசம் வரை பகல் முழுவதும் பிள்ளையார்பட்டி கோவிலில் நடை திறந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டியில் பிரசித்தி பெற்ற கற்பகவிநாயகர் கோவில் உள்ளது. தற்போது கார்த்திகை மாதம் என்பதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான ஐயப்ப பக்தர்கள் கார், வேன், பஸ் உள்ளிட்ட வாகனங்களில் இங்கு வந்து தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர். இதனால் தற்போது பகல் நேரங்களில் பிள்ளையார்பட்டி கோவிலில் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டு வருகிறது.

இதேபோல் வரும் ஜனவரி மாதம் 18-ந்தேதி தைப்பூச விழாவையொட்டி சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து பாதயாத்திரையாக பழனிக்கு செல்லும்போது அவர்கள் பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்வது வழக்கம். இதையடுத்து தைப்பூசம் வரை பகல் முழுவதும் பிள்ளையார்பட்டி கோவிலில் நடை திறந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். இத்தகவலை கோவில் டிரஸ்டிகள் கண்டனூர் நா.கருப்பஞ்செட்டியார், ஆ.முத்துப்பட்டிணம் சி.சுப்பிரமணியன் செட்டியார் ஆகியோர் தெரிவித்தனர்.
Tags:    

Similar News