ஆட்டோமொபைல்

25,000 யூனிட்களை கடந்த ஜீப் காம்பஸ்

Published On 2018-03-06 10:08 GMT   |   Update On 2018-03-06 10:08 GMT
இந்தியாவில் ஜீப் காம்பஸ் 25,000 யூனிட்கள் தயாரிக்கப்பட்டு இருப்பதை அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
புதுடெல்லி:

ஜீப் இந்தியா நிறுவனம் 25,000 ஜீப் காம்பஸ் யூனிட்களை தயாரித்து இருப்பதாக அறிவித்துள்ளது. இந்தியாவில் வெளியான ஏழு மாதங்களில் இத்தனை யூனிட்கள் தயாரிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. 

இந்தியாவில் ஏற்கனவே விற்பனையாகும் எஸ்.யு.வி. மாடல்களுக்கு போட்டியான விலையில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் ஜீப் காம்பஸ் அந்நிறுவனத்துக்கு சாதகமாக அமைந்தது. பூனே அருகே இயங்கி வரும் ரன்சஞ்கோன் தயாரிப்பு ஆலையில் உருவாக்கப்படும் ஜீப் காம்பஸ் 65 சதவிகித லோக்கலைசேஷன் செய்யப்பட்டுள்ளது.

மேலும் ஜீப் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வாகனங்களும் மும்பை ஆலையிலேயே தயாரிக்கப்படுகிறது. இவை அனைத்தும் வலது புற ஸ்டீரிங் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. மும்பை அருகே அமைந்திருக்கும் ரன்சஞ்கோன் தயாரிப்பு ஆலையில் உருவாக்கப்படும் வாகனங்கள் ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் ஐக்கிய ராஜ்ஜியம் உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

பத்துக்கும் அதிக வேரியண்ட்களில் விற்பனையாகும் ஜீப் காம்பஸ் பல்வேறு உயர் ரக அம்சங்களை கொண்டுள்ளது. ஜீப் காம்பஸ் எஸ்.யு.வி. இரண்டு வித இன்ஜின் ஆப்ஷன்களுடன் வெளியிடப்பட்டுள்ளது. இதன் பெட்ரோல் இன்ஜின் 1.4 லிட்டர் மல்டி-ஏர் டர்போ மோட்டார் 160 bhp செயல்திறன் மற்றும் 250 Nm பீக் டார்கியூ, 6-ஸ்பீடு மற்றும் 7-ஸ்பீடு DCT ஆட்டோமேடிக் கொண்டுள்ளது. 



டீசல் பவர் 2.0 லிட்டர் மல்டிஜெட் ஆயில் பர்னர் 170 bhp மற்றும் 350 Nm பீக் டார்கியூ, 6-ஸ்பீடு மேனுவல் இன்ஜின் வழங்கப்படுகிறது. இதன் பெட்ரோல் இன்ஜின் 2WD, டீசல் இன்ஜின் 2WD மற்றும் 4WD ஆப்ஷன்களை கொண்டுள்ளது. இரண்டு இன்ஜின்களும் BS-VI வகை எமிஷன் கொண்டுள்ளது. 

ஜீப் இந்தியா காம்பஸ் எஸ்.யு.வி. மாடலுக்கு 3 ஆண்டுகள் அதாவது 1,00,000 கிலோமீட்டர் வாரண்டி, மூன்று ஆண்டுகள் செல்லுபடியாகும் FCA மோபர் கேர் மற்றும் 24x7 ரோடுசைடு அசிஸ்டன்ஸ் வழங்கப்படுகிறது. ஆண்டிற்கு ஒரு சர்வீஸ் செய்ய ரூ.15,000 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஜீப் காம்பஸ் பேஸ் மாடல் விலை ரூ.15.16 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், இந்தியா) துவங்குகிறது. இதன் டாப்-எண்ட் மாடல் விலை ரூ.21.37 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News