செய்திகள்
இங்கிலாந்து வீரரை அவுட்டாக்க முயற்சிக்கும் நியூசிலாந்து கீப்பர்

லார்ட்ஸ் டெஸ்ட்: 75 ஓவரில் 273 ரன் இலக்கு- இங்கிலாந்து சேஸிங் செய்யுமா?

Published On 2021-06-06 13:49 GMT   |   Update On 2021-06-06 13:49 GMT
இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 275 ரன்னில் ஆட்டமிழக்க, நியூசிலாந்து 2-வது இன்னிங்சை 6 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது.
இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 378 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 2-வது நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்கள் எடுத்திருந்தது. 3-வது நாள் ஆட்டம் முழுவதும் மழையால் ரத்து செய்யப்பட்டது.

4--வது நாள் ஆட்டத்தில் இங்கிலாந்தில் 275 ரன்னில் சுருண்டது. 103 ரன்கள் முன்னிலைப் பெற்ற நியூசிலாந்து நேற்றைய 4-வது நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 62 ரன்கள் எடுத்திருந்தது.

இன்று கடைசி நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய நியூசிலா்நது 6 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்த நிலையில் 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது.

ஒட்டுமொத்தமாக நியூசிலாந்து அணி 272 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இதனால் இங்கிலாந்துக்கு 273 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது. ஆனால் 75 ஓவர்கள் மட்டுமே உள்ளது.

இங்கிலாந்து 75 ஓவர் வரை தாக்குப்பிடித்தால் போட்டி டிரா ஆகும். ஒருவேளை அதிரடியாக விளையாடிவிட்டால் வெற்றி பெற வாய்ப்புள்ளது. போட்டி டிராவில் முடியவே வாய்ப்புள்ளது.
Tags:    

Similar News