செய்திகள்
ஜிகே வாசன்

அரசு கவின் கலைக்கல்லூரி பாடத்தில் சிறந்த ஓவியர்களின் வரலாறை சேர்க்க வேண்டும்- ஜி.கே.வாசன்

Published On 2020-09-10 05:14 GMT   |   Update On 2020-09-10 05:14 GMT
சென்னையில் உள்ள அரசு கவின் கலைக்கல்லூரி பாடத்தில் சிறந்த ஓவியர்களின் வரலாறை சேர்க்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை:

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

இந்தியாவில் ஓவியத்திற்கு என்று புகழ்மிக்க பல்வேறு கல்லூரிகள் உள்ளன. அவற்றில் குறிப்பிடத்தக்கது இந்தியாவிலேயே முதன் முதலாக தொடங்கப்பட்ட சென்னையில் உள்ள அரசு கவின் கலைக்கல்லூரி ஆகும். இது 170 ஆண்டுகள் பழமையானது. இக்கல்லூரியில் பயின்ற மாணவர்கள் பலர் இந்தியாவிற்கும், உலகளவிலும் ஓவிய வளர்ச்சிக்கு அரும்பணியாற்றி பெருமை சேர்த்துள்ளனர்.

தமிழக முதலமைச்சரை வேந்தராக கொண்டு செயல்படும் ஒரே பல்கலைகழகம் தமிழ்நாடு டாக்டர் ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலைகழகம் ஆகும். ஆகவே தமிழக அரசு காலத்தால் அழியாத கலை பொக்கி‌ஷங்களை நமக்களித்த ஓவிய பிதாமகர்களை, போற்றும் விதமாக, அங்கீகாரம் அளிக்கும் விதமாக, பாடத் திட்டத்தில் திருத்தங்கள் செய்து, அவர்களின் வரலாற்றை தமிழக பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News