செய்திகள்
பேச்சிப்பாறை அணையை கலெக்டர் அரவிந்த் பார்வையிட்ட போது எடுத்த படம்

பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளை கலெக்டர் அரவிந்த் பார்வையிட்டார்

Published On 2020-10-31 05:24 GMT   |   Update On 2020-10-31 05:24 GMT
பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளை கலெக்டர் அரவிந்த் பார்வையிட்டார்.
நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் பெருஞ்சாணி அணையின் கொள்ளளவு 77 அடியாகவும், தற்போது நீர்மட்டம் 71.85 அடியாகவும் உள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக 273 கனஅடி தண்ணீர் வரத்து அதிகரித்து இருப்பதால் விவசாயத்துக்கு 450 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

இதேபோல் பேச்சிப்பாறை அணையின் கொள்ளளவு 48 அடியாகவும், நீர்மட்டம் 44.23 அடியாகவும் உள்ளது. பேச்சிப்பாறை அணையில் வினாடிக்கு 597 கனஅடி தண்ணீர் வரத்து அதிகரித்து இருப்பதால் விவசாயத்துக்கு 720 கனஅடிநீர் திறந்து விடப்படுகிறது.

தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் அணைகளுக்கு தண்ணீர் வரத்து எப்படி உள்ளது. மழை தீவிரம் அடைந்தால் அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படும் போது மதகுகள், கால்வாய்கள் அனைத்தும் சரியாக உள்ளனவா? என்பது குறித்து ஆய்வு செய்ய புதிதாக பொறுப்பேற்ற கலெக்டர் அரவிந்த் நேற்று பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு சென்றார்.

அணைகளை பார்வையிட்ட அவர், அங்கிருந்த பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் அணை பற்றி விவரங்களை கேட்டறிந்தார். அப்போது அணையை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று அங்கிருந்த அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.

அப்போது உதவி செயற்பொறியாளர் பொதுப்பணித்துறை (நீர் வளஆதாரஅமைப்பு) கிங்ஸ்லி, திருவட்டார் தாசில்தார் அஜிதா, உதவி பொறியாளர் அருள் செழியன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News