செய்திகள்
சரத் பவார்

மராட்டியத்தில் மூன்று கட்சிகள் கூட்டணி ஆட்சி ஐந்து வருடத்தை நிறைவு செய்யும்: சரத் பவார்

Published On 2021-06-10 11:22 GMT   |   Update On 2021-06-10 11:22 GMT
சரத் பவார்- தேவேந்திர பட்நாவிஸ், உத்தவ் தாக்கரே- பிரதமர் மோடி சந்தித்து மகாராஷ்டிரா அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 2019-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற்றது. 288 தொகுதிகளில் பாஜனதா- சிவசேனா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. முதலமைச்சர் யார் என்பதில் குழப்பம் ஏற்பட, உத்தவ் தாக்கரே தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி வைத்து ஆட்சி அமைத்தார்.

இந்த கூட்டணி பொருந்தாத கூட்டணி, மக்கள் விரோத கூட்டணி, உத்தவ் தாக்கரேயின் முதல்வர் பதவி எப்போது வேண்டுமென்றாலும் பறிபோகலாம் என பா.ஜனதா கூறியது. என்றாலும் கடும் நெருக்கடியில் ஆட்சி செய்து வரும் உத்தவ் தாக்கரே பதவி ஏற்று இரண்டு வருடம் முடிய இருக்கிறது.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் சந்தித்தார். உத்தவ் தாக்கரே பிரதமர் மோடியை சந்தித்தார்.

இதனால் மகாராஷ்டிரா அரசியலில் இந்த சந்திப்புகள் புயலை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் சிவசேனா- தேசியவாத காங்கிரஸ்- காங்கிரஸ் கட்சிகள் அமைத்துள்ள கூட்டணி ஆட்சி அதன் ஐந்தாண்டு காலத்தை நிறைவு செய்யும் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.


பிரதமர் மோடி, மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்கரே சந்திப்பு

இதுகுறித்து சரத் பவார் கூறுகையில் ‘‘சிவ சேனா நம்பக்கூடிய ஒரு கட்சி. இந்த கூட்டணி ஆட்சி ஐந்தாண்டுகள் நிறைவு செய்யும். மேலும், அடுத்த மக்களவை தேர்தல், சட்டசபை தேர்தலிலும் சிறப்பா செயல்படும்.

மாறுபட்ட கொள்கைகள் கொண்ட கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சி அமைத்துள்ளோம். சிவ சேனா ஆட்சி அமைக்கும் என நாம் ஒருபோதும் நினைத்திருக்க மாட்டோம். ஏனென்றால், நாம் ஒருபோதும் இணைந்து வேலை செய்தது கிடையாது. கொரோனா தொற்று காலத்தில் இணைந்து வேலை செய்வது, மூன்று கட்சிகளுக்கும் சிறந்த அனுபவம்’’ என்றார்.
Tags:    

Similar News