ஆன்மிகம்
சபரிமலை ஐயப்பன் கோவில்

மண்டல, மகரவிளக்கு காலத்தில் சபரிமலையில் தினமும் 1000 பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்

Published On 2020-10-30 05:23 GMT   |   Update On 2020-10-30 05:23 GMT
மண்டல, மகரவிளக்கு காலத்தில் சபரிமலையில் தினமும் 1000 பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். ஆனாலும் பக்தர்கள், கண்டிப்பாக கொரோனா இல்லை என்ற பரிசோதனை சான்றிதழ் பெற்றுத்தான் சபரிமலைக்கு வர வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டிருப்பது நினைவூட்டத்தக்கது.
கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டால் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை கணிசமாக இருக்கும். அதிலிருந்து 2 மாதங்களுக்கு சபரிமலை யாத்ரீக காலமாக கருதப்படுகிறது. குறிப்பாக மண்டல, மகரவிளக்கு தரிசனம் நடைபெறும் காலத்தில் உச்சபட்ச எண்ணிக்கையில் பக்தர்கள் சபரிமலையில் கூடுவார்கள்.

தற்போது கொரோனா காரணமாக மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. சபரிமலையிலும் சமூக இடைவெளி, குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பக்தர்கள் தரிசனம் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.

சபரிமலை யாத்ரீக காலம் தொடங்கினால் தினமும் 1000 பக்தர்களை அனுமதிக்க கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் நேற்று உத்தரவு பிறப்பித்தார். ஆனாலும் பக்தர்கள், கண்டிப்பாக கொரோனா இல்லை என்ற பரிசோதனை சான்றிதழ் பெற்றுத்தான் சபரிமலைக்கு வர வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டிருப்பது நினைவூட்டத்தக்கது.

வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்களுக்கு கொரோனா அறிகுறி ஏற்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் வசதிகள் ஏற்படுத்தப்படுவதாக பினராயி விஜயன் கூறி உள்ளார்.
Tags:    

Similar News