ஆன்மிகம்
அங்காள பரமேஸ்வரி

முசிறி அருகே வடக்கு சித்தாம்பூரில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2021-08-26 07:36 GMT   |   Update On 2021-08-26 07:36 GMT
முசிறி அருகே வடக்கு சித்தாம்பூர் கிராமத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் இன்று கும்பாபிஷேகம் நடக்கிறது.
முசிறி அருகே வடக்கு சித்தாம்பூர் கிராமத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இங்கு அங்காளபரமேஸ்வரி, வீரபத்திரசுவாமி, பெரியசுவாமி, கன்னிமார்கள், பேச்சியம்மன், அரச மகாராஜா சுவாமி, அரசாயியம்மன், காத்தவராயசுவாமி, மதுரைவீரன் ஆகிய தெய்வங்களின் சன்னதிகள் உள்ளன.

இந்த கோவிலின் கும்பாபிஷேக விழா கடந்த 20-ந்தேதி காலை முகூர்த்தகால் பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து நேற்று முன்தினம் காலை புண்ணிய நதியில் இருந்து தீர்த்தம் எடுத்துவரப்பட்டது. நேற்று மாலை திருமுறை பாராயணம், கணபதி வழிபாடு நடைபெற்று முதல் கால பூர்வாங்க பூஜைகள் நடைபெற்றன.

இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 4.30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சியை தொடர்ந்து 2-ம் கால யாகபூஜை நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு உயிர்கலை ஊட்டுதல் பூஜை நடைபெறும். காலை 9 மணிக்கு மேல் 9.30 மணிக்குள் கடம்புறப்பாடு மற்றும் மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
Tags:    

Similar News