செய்திகள்
கொள்ளை

பாளை கே.டி.சி. நகரில் தனியார் நிறுவனத்தில் ரூ.5 லட்சம் பணம்- பொருட்கள் கொள்ளை

Published On 2021-10-13 09:22 GMT   |   Update On 2021-10-13 09:22 GMT
பாளை கே.டி.சி. நகரில் தனியார் நிறுவனத்தில் ரூ.5 லட்சம் பணம் மற்றும் பொருட்கள் கொள்ளை போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர.
கல்லிடைக்குறிச்சி:

தூத்துக்குடியை சேர்ந்தவர் முருகன். இவர் பாளை கே.டி.சி.நகர் மங்கம்மாள் சாலையில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட் மாடியில் கட்டிட நிறுவனம் நடத்தி வருகிறார். அதே கட்டிடத்தில் நிதிநிறுவனம் மற்றும் இணையதள சேவை மையமும் நடத்தி வருகிறார்.

நேற்று இரவு ஊழியர்கள் அனைவரும் வேலையை முடித்துக்கொண்டு வழக்கம்போல் பூட்டிவிட்டு வீடு திரும்பினர். இன்று காலை நிறுவனத்தை திறக்க ஊழியர்கள் வந்தபோது கதவு உடைக்கப்பட்டு கிடந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த நிறுவனத்தின் மேலாளர் லெட்சுமணன் பாளை குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு மாநகர போலீஸ் துணை கமி‌ஷனர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து ஆய்வு செய்தனர்.

நிறுவனத்தின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு இருந்த ரூ.3 லட்சம் பணம் திருட்டு போயிருந்தது. மேலும் அங்குள்ள மற்றொரு அறையில் வைக்கப்பட்டு இருந்த ரூ.2 லட்சம் மதிப்பிலான கம்ப்யூட்டர்களையும் காணவில்லை.

மர்மநபர்கள் நள்ளிரவில் அலுவலகத்திற்குள் புகுந்து அரிவாளால் பூட்டுகளை வெட்டி இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதும், கொள்ளையடித்த பொருட்களை வாகனத்தில் ஏற்றி கொண்டு சென்றதும் விசாரணையில் தெரியவந்தது. மேலும் அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக அங்கிருந்த சி.சி.டி.வி. பதிவுகள் அடங்கிய ஹார்டு டிஸ்கை மர்மநபர்கள் அரிவாளால் வெட்டி எடுத்து சென்றுள்ளனர்.

இதனால் துப்பு துலக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்து வருகின்றனர். இதுதொடர்பாக பாளை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

கல்லிடைக்குறிச்சி மடவிளாகம் தெருவை சேர்ந்தவர் இசக்கிமுத்து (வயது 50). இவரது வீட்டின் பீரோவில் இருந்த 30 பவுன் நகைகள் காணாமல் போனது. பீரோ உடைக்கப்படவில்லை. மாறாக அது திறந்த நிலையில் இருந்தது. இதனால் இசக்கிமுத்து மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே அவர் கல்லிடைக்குறிச்சி போலீசில் புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து விசாரித்தனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை தேடி வருகின்றனர். திருட்டு போன நகைகளின் மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும்.
Tags:    

Similar News