ஆன்மிகம்
தக்கலை ஞானமாமேதை பீர்முகமது ஒலியுல்லா

தக்கலை ஞானமாமேதை பீர்முகமது ஒலியுல்லா ஆண்டு விழா இன்று தொடங்குகிறது

Published On 2021-02-13 03:04 GMT   |   Update On 2021-02-13 03:04 GMT
தக்கலை ஞானமாமேதை பீர்முகமது ஒலியுல்லா ஆண்டு விழா இன்று (சனிக்கிழமை) இரவு 9 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
தக்கலை ஞானமாமேதை பீர்முகமது ஒலியுல்லா 18 ஆயிரம் ஞானபுகழ்ச்சி பாடல்களை எழுதியுள்ளார். இவரது ஆண்டு விழா தக்கலை அஞ்சுவன்னம் பீர் முகமதியா முஸ்லிம் அசோசியேஷன் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி இந்த ஆண்டுக்கான விழா இன்று (சனிக்கிழமை) இரவு 9 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

18-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை மார்க்கப் பேருரை நடைபெறுகிறது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து அறிஞர்கள் பங்கேற்று உரை நிகழ்த்துகிறார்கள். 22-ந்தேதி பீரப்பா பாடிய ரோசுமீசாக்கு மாலை நூலின் வெளியீடு நடைபெறுகிறது.

இதில் பலர் கலந்து கொண்டு மார்க்க பேருரையாற்ற உள்ளனர். வருகிற 26-ந்தேதி ஞானப்புகழ்ச்சி பாடல் பாடும் நிகழ்ச்சி இரவு 9 மணிக்கு தொடங்கி மறுநாள் அதிகாலை வரை நடைபெறுகிறது. 27-ந்்தேதி மாலை 4.30 மணிக்கு நேர்ச்சை வழங்கப்படுகிறது. மார்ச் 3-ந் தேதி சியாரத் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

விழா ஏற்பாடுகளை நிர்வாக குழு தலைவர் அப்துல்ஜப்பார் தலைமையில் துணைத்தலைவர் முகமது சலீம், செயலாளர் ஹமீம் முஸ்தபா, பொருளாளர் முகமது ரபீக் மற்றும் ஷாகிர்அலி தலைமையிலான விழாக்குழுவினரும் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News