உள்ளூர் செய்திகள்
தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம்

5178 ஆக்கிரமிப்புகள் அகற்றம் -உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

Published On 2021-12-01 14:37 GMT   |   Update On 2021-12-01 14:37 GMT
நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றவும், நீர்நிலைகளை பாதுகாக்கவும் அனைத்து விதமான நடவடிக்கையும் மேற்கொண்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்தது.
சென்னை:

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரிய வழக்குகள் இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆக்கிரமிப்புகளை அகற்றியது தொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 

அதில், நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றவும், நீர்நிலைகளை பாதுகாக்கவும் அனைத்து விதமான நடவடிக்கையும் மேற்கொண்டு வருவதாகவும், 9802 ஆக்கிரமிப்புகள் அடையாளம் காணப்பட்டு 5178 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது. மேலும், ஆக்கிரமிப்பாளர்களுக்கு மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு தரப்பட மாட்டாது என்றும் அரசு உறுதி அளித்தது.
Tags:    

Similar News