ஆட்டோமொபைல்

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200 எஸ் இந்தியாவில் அறிமுகம்

Published On 2019-05-02 10:18 GMT   |   Update On 2019-05-02 10:18 GMT
ஹூரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்தியாவில் எக்ஸ்ட்ரீம் 200 எஸ் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. #HeroXtreme200S



உலகின் முன்னணி இருசக்கர வாகன உற்பத்தியாளரான ஹீரோ மோட்டோகார்ப் இந்தியாவில் எக்ஸ்ட்ரீம் 200 எஸ் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200 எஸ் மாடல் விலை இந்தியாவில் ரூ.98,500 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200 எஸ் மாடல் ஃபுல்லி ஃபேர்டு மோட்டார்சைக்கிள் ஆகும். இது எக்ஸ்ட்ரீம் 200 ஆர் மாடலை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. புதிய எக்ஸ்ட்ரீம் 200 எஸ் மாடலில் ஏர்-கூல்டு சிங்கிள் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. 199.6சிசி என்ஜின் 18.1 பி.ஹெச்.பி. பவர் @8000 ஆர்.பி.எம். செயல்திறன், 17.1 என்.எம். டார்க் @6500 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜின் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் வருகிறது.



எக்ஸ்ட்ரீம் 200 எஸ் மாடலின் முன்புறம் கூர்மையாக காட்சியளிக்கும் ஃபுல் எல்.இ.டி. ஹெட்லேம்ப் யூனிட் மற்றும் பின்புறம் ஃபுல் எல்.இ.டி. டெயில் லைட்களை கொண்டிருக்கிறது. மற்ற அம்சங்களான ஹேன்டில்பார் மற்றும் எக்சாஸ்ட் உள்ளிட்டவை எக்ஸ்ட்ரீம் 200 ஆர் மாடலில் உள்ளதை போன்று வழங்கப்படுகிறது.

சஸ்பென்ஷனை பொருத்தவரை முன்புறம் 37 எம்.எம். டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறம் மோனோஷாக் யூனிட் வழங்கப்பட்டுள்ளது. பிரேக்கிங்கிற்கு முன்புறம் 276 எம்.எம். டிஸ்க் பிரேக், பின்புறம் 220 எம்.எம். யூனிட் வழங்கப்பட்டுள்ளது. இரண்டு பிரேக்களும் சிங்கிள் சேனல் ஏ.பி.எஸ். உடன் வருகிறது.

புதிய எக்ஸ்ட்ரீம் 200 எஸ் மாடலில் 17-இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளது. எக்ஸ்ட்ரீம் 200 எஸ் மோட்டார்சைக்கிள் ஸ்போர்ட்ஸ் ரெட், மேப்பில் பிரவுன் மற்றும் பேந்தர் பிளாக் என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது.
Tags:    

Similar News