செய்திகள்
நிலநடுக்கம்

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

Published On 2020-11-06 23:58 GMT   |   Update On 2020-11-06 23:59 GMT
ஜம்மு காஷ்மீரில் இன்று அதிகாலை 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் இன்று அதிகாலை 4.29 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.1 அலகாக பதிவாகி இருந்ததாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்பு விவரங்கள் குறித்த தகவல் வெளியாகவில்லை. 
Tags:    

Similar News