செய்திகள்
பாலக்காடு ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மெமு ரெயில். ரெயிலின் உள்புற தோற்றம்.

ஈரோடு, சேலத்துக்கு நவீன வசதிகளுடன் மெமு ரெயில்

Published On 2019-10-05 04:09 GMT   |   Update On 2019-10-05 04:09 GMT
எர்ணாகுளம், பாலக்காடு டவுணில் இருந்து ஈரோடு, சொர்ணூரில் இருந்து சேலம் ஆகிய வழித்தடங்களில் இயக்கப்படும் பழைய ரெயிலுக்கு பதில் ‘மெமு’ ரெயில்கள் இந்த மாதம் முதல் இயக்கப்பட உள்ளன.
கொழிஞ்சாம்பாறை:

கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து எர்ணாகுளம், பாலக்காடு டவுணில் இருந்து ஈரோடு, சொர்ணூரில் இருந்து சேலம் ஆகிய வழித்தடங்களில் இயக்கப்படும் பழைய ரெயிலுக்கு பதில் ‘மெமு’ ரெயில்கள் இந்த மாதம் முதல் இயக்கப்பட உள்ளன.

இதனையடுத்து பாலக்காடு ரெயில் நிலையத்தில் ‘மெமு’ ரெயில் பொதுமக்கள் பார்வைக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதில் 2 என்ஜின்கள், 8 பெட்டிகள் உள்ளன. ஒவ்வொரு பெட்டியிலும் டிஸ்பிளே ஸ்கிரீன் பொருத்தப்பட்டுள்ளது. அனைத்து பெட்டிகளிலும் ஜி.பி.எஸ். கருவி, கண்காணிப்பு கேமிரா, எல்.இ.டி. லைட், பயோ டாய்லெட் வசதிகள் உள்ளன.

இந்த ரெயிலில் 614 இருக்கைகள் உள்ளன. 1,788 பேர் நின்று பயணம் செய்யலாம். இது தவிர கார்டு, ஓட்டுனர் பெட்டிகள் முழுக்க முழுக்க ஏ.சி. வசதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து ரெயில்வே கோட்ட மேலாளர் பிரதாப் சிங்க கூறும்போது, புதிய ரெயில் 35 சதவீதம் கூடுதல் ஆற்றில் கொண்டது. எதிர்வரும் நாட்களில் பாலக்காடு கோட்டத்துக்கு 3 ரெயில்கள் வருகிறது என்றார்.

Tags:    

Similar News