செய்திகள்
கோப்புபடம்

கோவை வழியாக செல்லும் சிறப்பு ரெயில்களின் இயக்க தேதி மேலும் நீட்டிப்பு

Published On 2021-01-04 08:00 GMT   |   Update On 2021-01-04 08:00 GMT
கோவை வழியாக இயக்கப்படும் சிறப்பு ரெயில்களின் இயக்க தேதி மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வேஅலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளது.
கோவை:

கோவை- லோக்மானிய திலக் இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயிலின் நேரம் மாற்றியமைக்கப்படுகிறது. அதன்படி, கோவையில் இருந்து தினமும் காலை, 8.55 மணிக்கு புறப்படும் ரெயில் (01014) திருப்பூர், சேலம், பெங்களூரு, தானே வழியாக மறுநாள் மதியம், 1:45 மணிக்கு மும்பை லோக்மானிய திலக் சென்றடைகிறது. லோக்மானிய திலக்கில் இருந்து இரவு, 10.35 மணிக்கு புறப்படும் ரெயில் (01013) மூன்றாவது நாள் காலை, 6.50 மணி க்கு கோவை வந்தடையும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

கோவை வழியாக செல்லும் சிறப்பு ரெயில்களின் இயக்க தேதி நீட்டிக்கப்பட்டுள்ளன. கொச்சு வேலியில் இருந்து இந்தூர் வரை இயக்கப்படும் சிறப்பு ரெயில் (02646) வருகிற 30-ந் தேதி வரையும், இந்தூரில் இருந்து கொச்சு வேலிக்கு (02645) பிப்ரவரி 1-ந்தேதி வரையும், கொச்சு வேலியில் இருந்து மைசூருக்கு (06316) வரும் ரெயில் 31 -ந்தேதி வரையும், மைசூரில் இருந்து கொச்சு வேலிக்கு (06315) செல்லும் ரெயில் பிப்ரவரி 1-ந்தேதி வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி தாதர் இடையேயான ரெயில் (06071/72) வருகிற 28-ந் தேதி வரையும், பரணியில் இருந்து எர்ணாகுளத்துக்கான ரெயில் (02521) வருகிற 27-ந்தேதி வரையும், எர்ணாகுளத்தில் இருந்து பரணிக்கு (02522) இயக்கப்படும் ரெயில், வருகிற 31-ந்தேதி வரையும், செகந்திராபாத்தில் இருந்து திருவனந்தபுரத்துக்கு (07230) இயக்கம் படும் ரெயில் மார்ச் 31-ந் தேதி வரையும், திருவனந்தபுரத்தில் இருந்து செகந்திராபாத்துக்கு (07229) இயக்கப்படும் ரெயில் ஏப்ரல் 2-ந்தேதி வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தெற்கு ரெயில்வே அலுவலகம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News