ஆன்மிகம்
திருப்பதி

திருமலையில் வைகுண்ட ஏகாதசி விழா: உள்ளூர் பக்தர்களுக்கு தினமும் 20 ஆயிரம் டிக்கெட்

Published On 2020-12-22 05:03 GMT   |   Update On 2020-12-22 05:03 GMT
திருமலையில் வைகுண்ட ஏகாதசி விழாவில் ஏழுமலையனை தரிசிக்க உள்ளூர் பக்தர்களுக்கு தினமும் 20 ஆயிரம் டிக்கெட் வழங்கப்படும் என்று திருப்பதி தேவஸ்தான அதிகாரி ஜவஹர்ரெட்டி தெரிவித்துள்ளார்.
திருமலை :

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 25-ந்தேதி வைகுண்ட ஏகாதசி, 26-ந்தேதி வைகுண்ட துவாதசி விழா நடக்கிறது. தற்போது கொரோனா பரவலால் வெளியூர், வெளி மாநில பக்தர்கள் கோவிலில் சாமி தாிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. உள்ளூரில் திருமலை, திருப்பதி மற்றும் சித்தூர் மாவட்ட பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. வைகுண்ட ஏகாதசி தரிசன டிக்கெட்டுகள் திருப்பதியில் 5 இடங்களில் வழங்கப்படுகிறது. அங்கு ஒரு நாளைக்கு 20 ஆயிரம் டிக்கெட்டுகள் வழங்கப்படும்.

வைகுண்ட ஏகாதசியையொட்டி 25, 26-ந்தேதி மற்றும் ஜனவரி 1-ந்தேதி ஏழுமலையான் கோவிலில் வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. அத்துடன் மேற்கண்ட 3 நாட்களுக்கு பக்தர்கள் கொண்டு வரும் சிபாரிசு கடிதங்கள் நிராகரிக்கப்படுகிறது. எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் நேரில் வந்து டிக்கெட்டுகள் பெற்று சாமி தரிசனம் செய்யலாம். ஒரு டிக்கெட்டுக்கு குடும்ப உறுப்பினர்கள் 5 பேர் மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள், என திருப்பதி தேவஸ்தான அதிகாரி ஜவஹர்ரெட்டி தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News