ஆன்மிகம்
மண்டைக்காடு பகவதி அம்மன்

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் யானை மீது சந்தனகுட ஊர்வலம்

Published On 2020-01-16 04:15 GMT   |   Update On 2020-01-16 04:15 GMT
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் யானை மீது சந்தனகுட ஊர்வலம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மண்டைக்காடு தேவி சேவா சங்கம் சார்பில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் கார்த்திகை மாதம் 1-ந் தேதி முதல் தை மாதம் 1-ந் தேதி வரை மண்டலகால அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

இதன் நிறைவு விழா மற்றும் யானை மீது சந்தனகுட ஊர்வலம் புதன்கிழமை நடந்தது. இன்று காலை 8.30 மணிக்கு லட்சுமிபுரம் மவுன குருசாமி சமாதி பீடத்தில் இருந்து சந்தனகுட ஊர்வலம் புறப்பட்டு கருமன்கூடல் விலக்கு, பருத்திவிளை, நடுவூர்கரை திருப்பு, செக்காரவிளை வழியாக மண்டைக்காடு கோவிலை வந்தடைகிறது.

நிகழ்ச்சிக்கு சங்க கவுரவ ஆலோசகர் காளிப்பிள்ளை தலைமை தாங்குகிறார். மாவட்ட இந்து முன்னணி தலைவர் மிசாசோமன் முன்னிலை வகிக்கிறார். ஊர்வலத்தை வெள்ளிமலை விவேகானந்த ஆஸ்ரம தலைவர் சைதன்யானந்த மகராஜ் தொடங்கி வைக்கிறார். பகல் 11 மணிக்கு மண்டலகால நிறைவு விழா நடக்கிறது. 
Tags:    

Similar News