செய்திகள்
தலிபான்கள்

முன்னாள் துணை அதிபரின் சகோதரரை கொன்ற தலிபான்கள்

Published On 2021-09-11 09:22 GMT   |   Update On 2021-09-11 09:22 GMT
பஞ்ச்ஷிர் மாகாணத்தில் தலிபான்களுக்கும் தேசிய கிளர்ச்சி குழுவினருக்கும் கடும் மோதல் நடந்து வந்த சூழ்நிலையில் அந்த மாகாணத்தை தலிபான்கள் கைப்பற்றினர்.
ஆப்கானிஸ்தானில் உள்ள 34 மாகாணங்களில் 33 மாகாணங்களை தலிபான்கள் எளிதாக கைப்பற்றி விட்டனர். ஆனால் பஞ்ச்ஷிர் மாகாணம் மட்டும் தலிபான்களுக்கு அடிபணிய மறுத்தனர். அங்குள்ள தேசிய கிளர்ச்சி குழுவினருக்கும் தலிபான்களுக்கும் இடையே சண்டை ஏற்பட்டது.

ஆப்கானிஸ்தானில் ஆட்சியை தலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து துணை அதிபராக இருந்த அம்ருல்லா சலே, பஞ்ச்ஷிர் மாகாணத்தில் தஞ்சம் அடைந்தார். அங்கிருந்தபடி தன்னை ஆப்கானிஸ்தான் அதிபர் என்று அறிவித்தார். மேலும் தலிபான்களுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வந்தார்.

பஞ்ச்ஷிர் மாகாணத்தில் தலிபான்களுக்கும் தேசிய கிளர்ச்சி குழுவினருக்கும் கடும் மோதல் நடந்து வந்த சூழ்நிலையில் அந்த மாகாணத்தை தலிபான்கள் கைப்பற்றினர்.

இந்த நிலையில் முன்னாள் அதிபர் அம்ருல்லா சலேவின் மூத்த சகோதரர் ரோகுல்லா சலேவை சிறைபிடித்து தலிபான்கள் கொலை செய்துள்ளனர்.

இதுகுறித்து அவரது உறவினர் எபதுல்லா சலே செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அனுப்பிய செய்தியில் ‘ரோகுல்லா சலேவை தலிபான்கள் கொடூரமாக கொலை செய்தனர். அவரது உடலை அடக்கம் செய்ய எங்களை விடவில்லை. அவரது உடல் அழுக வேண்டும் என்று தலிபான்கள் தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News