வழிபாடு
வள்ளியூர் முருகன் குகைக்கோவில்

வள்ளியூர் முருகன் குகைக்கோவிலில் வருகிற 6-ந்தேதி கும்பாபிஷேகம்

Published On 2022-01-27 08:52 GMT   |   Update On 2022-01-27 08:52 GMT
வள்ளியூர் முருகன் குகைக்கோவிலில் வருகிற 6-ந் தேதி மாவட்ட கலெக்டரின் தனி அனுமதி பெற்று பொதுமக்கள் முழு ஒத்துழைப்புடன் கொரோனா வழிகாட்டுதலின்படி கும்பாபிஷேகம் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் வள்ளியூரில் அமைந்துள்ள முருகன் குகைக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்காக புனரமைப்பு பணிகள் நடந்தது. இந்நிலையில் கும்பாபிஷேகம் நடத்துவது தொடர்பாக அறநிலையத்துறை சார்பில் பக்தர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கோவில் ஆய்வாளர் கார்த்தீஸ்வரி தலைமை தாங்கினார்.

வள்ளியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாகுல்ஹமீது முன்னிலை வகித்தார். கோவில் செயல் அலுவலர் ஜெகநாதன் வரவேற்றார். கூட்டத்தில் வருகிற 6-ந் தேதி மாவட்ட கலெக்டரின் தனி அனுமதி பெற்று பொதுமக்கள் முழு ஒத்துழைப்புடன் கொரோனா வழிகாட்டுதலின்படி கும்பாபிஷேகம் நடத்துவது என்றும், கும்பாபிஷேகத்தை சைவ ஆகம விதிப்படி நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

இதில் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், பல்வேறு அமைப்பினர்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News