செய்திகள்
சிறை

5 வயது சிறுமியை கற்பழித்தவருக்கு 25 ஆண்டுகள் சிறை - உ.பி. நீதிமன்றம் அதிரடி

Published On 2020-02-13 09:41 GMT   |   Update On 2020-02-13 09:41 GMT
உத்தர பிரதேசத்தில் 5 வயது சிறுமியை கற்பழித்தவருக்கு முசாபர்பூர் போக்சோ நீதிமன்றம் 25 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது.
முசாபர்நகர்:

நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இளம்பெண்கள், ஏன் சிறுமிகள் கூட ஒரு சில கயவர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர். பாலியல் குற்றங்களை தடுக்க அரசு முயற்சி வரும் நிலையிலும் ஆங்காங்கே பாலியல் கொடூரங்கள் அரங்கேறிதான் வருகின்றன. 

நாட்டையே உலுக்கிய நிர்பயா சம்பவத்தில் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டவர்களுக்கு தண்டனை நிறைவேற்றுவதில் எவ்வளவு இழுபறி உள்ளது என்பதையும் நாம் அறிவோம். 

இந்நிலையில், உத்தர பிரதேசத்தில் 5 வயது சிறுமியை கற்பழித்தவருக்கு முசாபர்பூர் போக்சோ நீதிமன்றம் 25 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2013ம் ஆண்டு முசாபர்பூரைச் சேர்ந்த ஒருவர் அதே பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுமியை கடத்திச் சென்று கற்பழித்தார். இச்சம்பவம் தொடர்பாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. பல ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கில், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை விசாரிக்கும் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு இன்று வழங்கியது. குற்றம்சாட்டப்பட்டவரின் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 25 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.50000 அபராதமும் விதித்து முசாபர்பூர் போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டது. 

Tags:    

Similar News