செய்திகள்
திருப்பூரில் உள்ள ஓட்டலில் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்த காட்சி.

திருப்பூர் ஓட்டல்களில் 32 கிலோ கெட்டுப்போன இறைச்சிகள் பறிமுதல் - அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

Published On 2021-09-14 07:46 GMT   |   Update On 2021-09-14 07:46 GMT
அவிநாசி சாலை, தாராபுரம் சாலை, காங்கயம் சாலை பகுதியில் உள்ள 23 அசைவ ஓட்டல்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் விஜய லலிதாம்பிகை தலைமையில் அதிகாரிகள் குழுவினர் மாவட்டத்தில் உள்ள அசைவ ஓட்டல்களில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.

அவிநாசி சாலை, தாராபுரம் சாலை , காங்கயம் சாலை பகுதியில் உள்ள 23 அசைவ ஓட்டல்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் உரிய பராமரிப்பு மேற்கொள்ளாத 12 ஓட்டல்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டது. மேலும் 3 ஓட்டல்களில் கெட்டு போன இறைச்சி 32 கிலோ பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. 

இதுமட்டுமின்றி உணவு தயாரிக்க வைத்திருந்த மசாலா பொருட்கள் முறையாக பாதுகாப்பின்றி வைக்கப்பட்டிருந்தது கண்டறிந்து 9 கிலோ பொருட்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. 

இதுகுறித்து அதிகாரி விஜயலலிதாம்பிகை கூறுகையில், 

கெட்டு போன இறைச்சிகளை பயன்படுத்தினால் ஓட்டல்களுக்கு சீல் வைத்து  நடவடிக்கை எடுக்கப்படும். எனவே ஓட்டல் நிர்வாகங்கள் தரமான பொருட்களை  கொண்டு உணவுகள் தயார் செய்ய வேண்டும். தொடர்ந்து  மாவட்டம் முழுவதும்  ஓட்டல்களில் சோதனை நடத்தப்படும் என்றார். 
Tags:    

Similar News