உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

ஏலகிரி மலையில் இரு கோஷ்டியினர் இடையே மோதல் - 12 பேர் மீது வழக்கு பதிவு

Published On 2022-05-07 10:09 GMT   |   Update On 2022-05-07 10:09 GMT
ஏலகிரி மலையில் இரு கோஷ்டியினர் இடையே ஏற்பட்ட மோதலில் 12 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜோலார்பேட்டை:

சென்னை அருகே டி.நகர் பகுதியை சேர்ந்தவர் சிவா அய்யாதுரை (வயது50) என்பவருக்கு அத்தனாவூர் பகுதியில் ஒரு ஏக்கருக்கு மேலாக நிலம் உள்ளது. மேலும் இதே அத்தனாவூர் பகுதியை சேர்ந்த குட்டி என்பவருக்கும் இந்த சொத்து சம்பந்தமாக வழக்கு நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் நேற்று சிவா அய்யாதுரை அவரது வேலையாட்களுடன் நிலத்தில் தாயாரின் படத்தை வைத்து பூஜை செய்ததாக கூறப்படுகிறது. அப்போது மாடு கட்டுவதற்காக சென்ற குட்டி வழக்கு நிலுவையில் உள்ளதால் ஏன் நிலத்தில் கம்பி வேலி போடுகிறாய் என கேட்டதால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதனால் ஆத்திரமடைந்த இருதரப்பினரும் கத்தி இரும்பு ராடு கல் போன்ற ஆயுதங்களால் சரமாரியாக தாக்கிக் கொண்டுள்ளனர். சிவா அய்யாதுரை, இவரது மனைவி மற்றும் பணியாட்கள் சாந்தி, ஆனந்த் பாபு ஆகிய 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
மேலும் குட்டி என்பவர் தரப்பில் குட்டி, தூக்கன், மலையான், சிவக்குமார் ஆகிய 4 பேரும் படுகாயமடைந்தனர். 

மேலும் படுகாயம் அடைந்த அனைவரும் ஏலகிரிமலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி பெற்று மேல் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் இது குறித்து சிவா அய்யாதுரை கொடுத்த புகாரின் பேரில் மலையான், குட்டி, குட்டியின் மனைவி, மலையான் மனைவி, மலையான் மகன்கள் 2 பேர் என 6 பேர் மீதும், குட்டி என்பவர் கொடுத்த புகாரின் பேரில் சிவா அய்யாதுரை, இவரது மனைவி, ரமேஷ்பாபு ஆனந்த்பாபு மற்றும் 2 பெண்கள் உட்பட 6 பேர் என இரு தரப்பின்ரின். 

புகாரில் 12 பேர் மீது ஏலகிரி மலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News