உள்ளூர் செய்திகள்
ரெயில் நிலையத்தில் வடமாநில குழந்தை தொழிலாளர்கள் 4 பேர் மீட்கப்பட்டனர்.

ரெயில் நிலையத்தில் வடமாநில குழந்தை தொழிலாளர்கள் 4 பேர் மீட்பு

Published On 2022-04-16 08:52 GMT   |   Update On 2022-04-16 08:52 GMT
ரெயில் நிலையத்தில் வடமாநில குழந்தை தொழிலாளர்கள் 4 பேர் மீட்கப்பட்டனர்.
திருச்சி:

வட மாநிலங்களான ஜார்கண்ட், பீகார், மேற்கு வங்காளம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து திருச்சி ஈரோடு சேலம் திருப்பூர் உள்ளிட்ட மாவட்டத்திற்கு குழந்தை தொழிலாளர்களை அழைத்து வருவதாக திருச்சி ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு தகவல்கள் வந்து கொண்டே இருந்தது.

அந்த அடிப்படையில் திருச்சி ரெயில் நிலையத்திற்கு வடமாநிலத்தில் இருந்து வருகை புரியும் அனைத்து ரெயில்களையும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் தீவிரமாக சோதனை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் இன்று அதிகாலை கொல்கத்தா ஹவுரா பகுதியிலிருந்து ஹவரா எக்ஸ்பிரஸ் திருச்சி ரெயில் நிலையத்திற்கு 3 மணி அளவில் வந்தது.

அப்போது திருச்சி ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் தலைமையிலான போலீசார் ஹவுரா விரைவு எக்ஸ்பிரஸ் ரெயிலில் தீவிரமாக சோதனை செய்து வந்தனர்.

அப்போது 4 சிறுவர்கள்சந்தேகம் படும்படியாக நின்று கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து விசாரணை நடத்தியதில் ஜார்கண்ட் பகுதியைச் சேர்ந்த மத்தியூஸ் முர்மோ (வயது13), சிம்லா மராண்டி (13), மேற்கு வங்காளம் பகுதியைச் சேர்ந்த சோமநாத் டோமோ (15), பந்தன் தந்தார் (16) ஆகிய 4 பேரும் ஏஜெண்டுகள் மூலமாக திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு வேலைக்கு செல்வதற்காக வந்துள்ளனர். என்பது தெரியவந்தது.

பின்னர் அந்த சிறுவர்களை மீட்டு திருச்சி சைல்டு லைன் அமைப்பிற்கு தகவல் கொடுத்தனர்.  தொடர்ந்து குழந்தை தொழிலாளர்கள் திருச்சி ரெயில் நிலையத்திற்கு வருகை புரிவது அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. இதனால் வட மாநிலத் தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் இவ்வாறு ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News