செய்திகள்

இந்திய போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான் - இரு விமானிகளை கைது செய்ததாக அறிவிப்பு

Published On 2019-02-27 09:25 GMT   |   Update On 2019-02-27 09:25 GMT
பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்த இரு போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக அறிவித்துள்ள அந்நாட்டின் ராணுவம், கைதான இந்திய விமானியின் பெயர் மற்றும் அவரது விமானப்படை அடையாள எண்ணை வெளியிட்டது. #Indianaircraftshot #Indianpilotsarrested
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் எல்லைக்குள் இன்று நுழைந்த இரு போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் ராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வீழ்த்தப்பட்ட இரு விமானங்களில் ஒன்று பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரின் கோஹி ரட்டா பகுதியில் விழுந்து தீப்பற்றி எரியும் காட்சிகளை அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

மேலும் ஒரு போர் விமானம் இந்தியாவின் காஷ்மீர் பகுதிக்குள் விழுந்ததாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், பாகிஸ்தான் பகுதிக்குள் விழுந்த இந்திய போர் விமானத்தில் வந்த இரு விமானிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களில் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பாகிஸ்தான் ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிப் கபூர் தெரிவித்துள்ளார்.

கைதான மற்றொரு இந்திய விமானி தன்னுடைய பெயர் மற்றும் விமானப்படையில் தனது பணி அடையாள எண் ஆகியவற்றை அந்நாட்டு அதிகாரிகளிடம் தெரிவிக்கும் வீடியோவையும் அவர் வெளியிட்டுள்ளார்.



எனது பெயர் அபினந்தன். நான் விமானப்படை விங் கமாண்டர் அதிகாரி. என்னுடைய பணி அடையாள (service No) எண்: 27 981 என அந்நபர் கூறும் வீடியோ மற்றும் அவரது புகைப்படங்களை பாகிஸ்தான் ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன. #Indianaircraftshot #Indianpilotsarrested #Surgicalstrike2 #IAFattack
Tags:    

Similar News