செய்திகள்
முக ஸ்டாலின் - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

பள்ளிகள் திறப்பு குறித்து முதலமைச்சர் முடிவு செய்வார் - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

Published On 2021-07-29 08:18 GMT   |   Update On 2021-07-29 08:18 GMT
அரசுப்பள்ளிகள் இன்னும் 2 ஆண்டுகளில் தனியார் பள்ளிகளுக்கு நிகராக உயர்த்தப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

வல்லம்:

தஞ்சை அடுத்த கள்ளப் பெரம்பூர் செங்கழுநீர் ஏரியை இன்று தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது ஏரியின் கரையை பலப்படுத்தும் விதமாகவும், நீர் ஆதாரத்தை பாதுகாக்கும் விதமாகவும் கரைகளின் இரண்டு புறங்களும் 500 மரங்களைக் கொண்ட குருங்காடு திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இதையடுத்து அவர் அளித்த பேட்டியில் கூறியிருபப்தாவது:-

மாநிலம் முழுவதிலும் உள்ள அரசு பள்ளிகளில் மரக்கன்று நட்டு பராமரிக்கப்படும். ரத்ததானம் போல் மரக்கன்று நடுவதை மாணவர்கள் பின்பற்றிட வேண்டும். 9-வது முதல் 12- ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறப்பு குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்வார். மாணவர்களுக்கு தடுப்பூசி போடும் வாய்ப்பு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து அவர் முடிவு எடுப்பார்.


அரசுப்பள்ளிகள் இன்னும் 2 ஆண்டுகளில் தனியார் பள்ளிகளுக்கு நிகராக உயர்த்தப்படும். அரசு பள்ளிகளில் சேர சிபாரிசு வரும் நிலையும் ஏற்படும். அரசு பள்ளிகளில் சிலம்பம் உள்ளிட்ட தற்காப்பு கலையும் கற்றுத்தர முயற்சிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News