வழிபாடு
காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள்

ஆண்டுக்கு 260 நாட்கள் உற்சவம் காணும் கோவில்

Published On 2022-03-04 08:54 GMT   |   Update On 2022-03-04 08:54 GMT
காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் ஆலயத்தில் ஆண்டுக்கு 260 நாட்கள் அங்கு உற்சவம் நடப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. அது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் ஆலயத்தில் எப்போதும் திருவிழா கோலமாக காணப்படும். ஆண்டுக்கு 260 நாட்கள் அங்கு உற்சவம் நடப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

சித்திரை மாதம் அவதார உற்சவம்நடைபெறும். வைகாசி பிரமோற்சவம் நடத்தப்படும். ஆனி கோடை உற்சவமும், ஜேஷ்டாபிஷேகம் நடத்தப்படும். ஆனி சுவாமி அன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். பெரியாழ்வார்சாத்தும் முறை கடைபிடிக்கப்படும். ஆடி மாதம் பூசம் உற்சவமும், ஆண்டாள் திருக்கல்யாணமும் நடைபெறும். ஆவணி மாதம் பவித்ரா உற்சவம் 7 நாட்களுக்கு நடைபெறும்.

அந்த மாதத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழாவும் கோகலாமாக கொண்டாடப்படும். புரட்டாசி மாதம் நவராத்திரி உற்சவம் மேற்கொள்ளப்படும். நவராத்திரி 10 நாட்களும் மண்டபத்தில் தயாருக்கு திருமஞ்சனம் செய்யப்படும். இந்த தலத்தில் தாயார் படிதாண்டா பத்தினி அம்சத்தில் உள்ளார். பெருமாளும் தாயாரும் ஏகாந்த சேவையில் இருப்பார்கள்.

ஐப்பசி மாதம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும். கார்த்திகை மாதம் பரணி தீபமும், கார்த்திகை தீபமும் ஏற்றப்படும். மூலவர் மற்றும் தங்கப்பல்லிக்கு தைலகாப்பு சாத்தப்படும். மார்காழி மாதம் 21 நாட்களுக்கு ராபத்து, பகல்பத்து விழாக்கள் கொண்டாடப்படும். தை மாதம் மகரசங்ராந்தி கொண்டாடப்படும். அந்த மாதத்தில் அனந்தசரஸ் புனித திருக்குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெறும். தை மாதத்தில் ரதசத்தமி விழாவும் நடைபெறும்.

சுவாமி சூரிய பிரபை, சந்திர பிரபை திருவீதி உலா வருவார். மாசி மாதம் வனபோஜனம் நடைபெறும். ஆற்றங்கரை அல்லது வன பகுதியில் சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்படும். காஞ்சீபுரத்துக்கு மிக அருகில் பாலாற்றாங்கரை இருப்பதால் அங்கு சென்று இந்த பூஜைகள் நடத்தப்படுவது உண்டு. மாசி மாதம் தென்னேரியில் இருந்து உற்சவம் நடத்தப்படும். பவுர்ணமி தினத்தன்று ராஜகுளத்தில் தெப்பம் விடப்படும். மூன்று நாட்கள் தவன உற்சவம் நடைபெறும். பங்குனி மாதம் 7 நாட்களுக்கு அவதார திருநாள் கொண்டாடப்படும்.
Tags:    

Similar News