தொழில்நுட்பம்
சாம்சங் சீரோ

சாம்சங்கின் புதிய ஸ்மார்ட் டிஸ்ப்ளே அறிமுகம்

Published On 2020-01-06 10:54 GMT   |   Update On 2020-01-06 10:54 GMT
சாம்சங் நிறுவனம் சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் சீரோ என்ற பெயரில் புதிய ஸ்மார்ட் டி.வி.யை அறிமுகம் செய்துள்ளது.



2020 சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் சாம்சங் நிறுவனம் புதிதாக சீரோவை அறிமுகம் செய்துள்ளது. இது 43 இன்ச் டி.வி. ஆகும். புதிய சாம்சங் டி.வி. அதனுடன் இணைக்கப்பட்டு இருக்கும் மொபைல் போனில் இயங்கும் தரவுகளுக்கு ஏற்ப ஃபிரேம் தானாக மாற்றி கொள்ளும்.

இந்த டி.வி. 4.2 சேனல் 60வாட் ஸ்பீக்கர் சிஸ்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இது டி.வி.யினை மொபைல் தரவுகளுக்கு ஏற்ப சுழல செய்யும். 

சாம்சங் சீரோவில் ஆப்பிள் ஏர்பிளே 2 வசதி வழங்கப்பட்டுள்ளது. இதை கொண்டு ஐ.ஒ.எஸ். வாடிக்கையாளர்கள் வைபை மூலம் டி.வி.யில் தரவுகளை இயக்க முடியும். மற்றொரு அம்சமான சாம்சங் வால் கொண்டு டி.வி. பயன்படுத்தப்படாத போது சீரோவில் புகைப்படங்கள், போஸ்டர்கள் உள்ளிட்டவற்றை ஒளிபரப்ப முடியும்.



புதிய சீரோ தவிர சாம்சங் நிறுவனம் 8K QLED டி.வி.யை Q950TS பெயரில் அறிமுகம் செய்துள்ளது. இதில் எட்ஜ்-டு-எட்ஜ் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இதனை சாம்சங் இன்ஃபினிட்டி ஸ்கிரீன் என அழைக்கிறது. இந்த டி.வி.யின் பெசல் 2.3எம்.எம். அளவில் உருவாக்கப்பட்டுள்ளது. இது சந்தையில் கிடைக்கும் டி.வி.க்களில் மிகவும் சிறியதாகும்.
 
இத்துடன் மேம்பட்ட லைட் சென்சார் கொண்ட தி ஃபிரேம் டி.வி.யை சாம்சங் அறிமுகம் செய்கிறது. புதிய சென்சார் டி.வி. பயன்படுத்தப்படாத நிலையில், பேனலை ஆஃப் செய்யும். தி ஃபிரேம் டி.வி. 32-இன்ச் மற்றும் 75-இன்ச் அளவுகளில் கிடைக்கிறது. டி.வி.யுடன் நோ-கேப் வால் மவுண்ட் மற்றும் இன்விசிபிள் கனெக்ஷன் வழங்கப்படுகிறது. 

மேலும் சாம்சங் மைக்ரோ எல்.இ.டி. ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இதனை சாம்சங் ஃப்ளிப் 2 என அழைக்கிறது. சாம்சங் மைக்ரோ எல்.இ.டி. மொத்தம் 83, 93, 110 மற்றும் 150 இன்ச் அளவுகளில் கிடைக்கிறது. ஃபிளிப் 2 மாடலில் 43 இன்ச் அளவில் சுழலும் ஸ்டான்ட் கொண்டிருக்கிறது. 
Tags:    

Similar News