வழிபாடு
திருவள்ளூர் வைத்திய வீரராகவர் பெருமாள் கோவில்

திருவள்ளூர் வீரராகவர் பெருமாள் கோவிலில் 16-ந்தேதி லட்சார்ச்சனை மகோற்சவ விழா

Published On 2022-04-11 07:49 GMT   |   Update On 2022-04-11 07:49 GMT
சித்திரை மாதம் தொடக்கத்தில் வரும் சித்திரை நட்சத்திர தினமாக வருகிற 16-ந் தேதி அன்று வீரராகவ பெருமாள் கோவில் ஏகதின லட்சார்ச்சனை மகோத்சவம் நடைபெற இருக்கிறது.
திருவள்ளூர் வைத்திய வீரராகவ பெருமாள் கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்று ஆகும்.

சித்திரை மாதத்தில் வரும் சித்திரை நட்சத்திரத்தில் வீரராகவர் பிரதிஷ்டை தினம் என்பதால் அன்று அவதார தினமாக கொண்டாப்படுகிறது.

கடந்த 2014 ஆண்டுக்கு பிறகு தற்போது சித்திரை மாதத்தில் இரண்டு முறை சித்திரை நட்சத்திரம் வருகிற 16-ந் தேதி, அடுத்த மாதம் 14-ந் தேதி வருகிறது.

இதில் சித்திரை மாதம் தொடக்கத்தில் வரும் சித்திரை நட்சத்திர தினமாக வருகிற 16-ந் தேதி அன்று வீரராகவ பெருமாள் கோவில் ஏகதின லட்சார்ச்சனை மகோத்சவம் நடைபெற இருக்கிறது.

லட்சார்ச்சனை காலை 5.30 மணி முதல் மாலை 3.00 மணி வரை நடைபெற உள்ளது.

இதனைத் தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு திரு மஞ்சனம், மாலை உற்சவர் வீரராகவப்பெருமாள் ராஜவீதி புறப்பாடு நடைபெறும்.

சித்திரை மாத பிரமோற்சவ விழா மே மாதம் 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் வெவ்வேறு வாகனத்தில் வீரராகவப் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். சித்திரை மாத இறுதியில் பிரம்மோற்சவ விழாவின் 9-வது நாளான வருகிற 14-ந் தேதி சித்திரை நட்சத்திரத்தில் காலை 10.30 மணிக்கு கோயில் குளத்தில் தீர்த்தவாரி வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.

விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.
Tags:    

Similar News