செய்திகள்
புதின்

எல்லையில் பறந்து அமெரிக்கா, நேட்டோ விமானங்கள் பதற்றத்தை ஏற்படுத்துகின்றன: ரஷியா எச்சரிக்கை

Published On 2020-09-22 12:23 GMT   |   Update On 2020-09-22 12:23 GMT
எல்லையை நோக்கி வந்த இங்கிலாந்து உளவு விமானத்தை துரத்தியடித்ததாக ரஷிய தேசிய பாதுகாப்பு கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
ரஷியா எல்லையை நோக்கி வந்த இங்கிலாந்து உளவு விமானத்தை தங்கள் நாட்டு போர் விமானங்கள் துரத்தியடித்ததாக அந்நாட்டு தேசிய பாதுகாப்பு கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

ரஷியா எல்லையை நெருங்கிய அந்த உளவு விமானம் ‘ஆர் -1 சென்டினல்’ என அடையாளம் காணப்பட்டது. இதனையடுத்து தளத்திலிருந்து புறப்பட்ட ரஷியாவின் இரண்டு மிக்-31 போர் விமானங்கள், பேரண்ட்ஸ் கடலுக்கு மேல் உளவு விமானத்தை துரத்தியடித்தது.

இங்கிலாந்து விமானம் திரும்பிச்சென்ற பின்னர், ரஷிய விமானங்கள் தளத்திற்கு திரும்பின என தேசிய பாதுகாப்பு கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை கருங்கடல் வழியாக அமெரிக்க ரோந்து விமானத்தை ரஷிய துரத்தியடித்ததாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் கூறியது. நேட்டோ விமானம் கடந்த ஒரு மாதமாக ரஷிய எல்லைக்கு அருகே உளவு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.

ரஷியாவின் எல்லைக்கு அருகே அமெரிக்கா மற்றும் நேட்டோ விமானங்களின் இத்தகைய வழக்கமான ரோந்து பதற்றததை ஏற்படுத்துவதாக ரஷியா எச்சரித்துள்ளது.
Tags:    

Similar News