செய்திகள்
இந்திய எல்லையில் தாக்குதல் (மாதிரிப் படம்)

எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் குண்டுவீச்சு

Published On 2019-10-09 12:20 GMT   |   Update On 2019-10-09 12:20 GMT
இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளான பால்கோட், கிருஷ்ணாகட் பகுதியில் உள்ள கிராமங்களில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது.
ஜம்மு:

ஜம்மு காஷ்மீரில் இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ளது பூஞ்ச் மாவட்டம். எல்லைப் பகுதியான இங்கு அவ்வப்போது துப்பாக்கிச்சூடு போன்ற தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. எல்லைப் பகுதியில் இரு நாடுகளிடையே நிலவும் பதற்றத்தை தணிக்க, தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தங்கள் இருக்கும்போதிலும், பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தி வருகிறது. இந்திய ராணுவமும் அதற்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறது.

இந்நிலையில், நேற்றிரவு பாகிஸ்தான் ராணுவம் பால்கோட் மற்றும் கிருஷ்ணாகட் பகுதிகளில் துப்பாக்கிச்சூடு நடத்தியது. சிறிது நேரத்தில் சிறிய ரக பீரங்கி குண்டுகளையும் வீசியது. இதற்கு இந்திய ராணுவம் தகுந்த பதிலடி அளித்தது. இதையடுத்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலை நிறுத்தியது. இதனால் அப்பகுதியில் உள்ள கிராம மக்கள் அச்சத்தில் உறைந்தனர்.

இந்த ஆண்டு மட்டும் பாகிஸ்தான் ராணுவம் 2,050 முறைகளுக்கு மேல் போர் நிறுத்த விதிமுறைகளை மீறி இம்மாதிரியான தாக்குதல்கள் நடத்தியுள்ளன. இந்த தாக்குதல்களில் 21 இந்தியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News