பெண்கள் மருத்துவம்
அதிகரிக்கும் திட்டமிடப்படாத கருக்கலைப்புகள்

அதிகரிக்கும் திட்டமிடப்படாத கருக்கலைப்புகள்

Published On 2022-04-19 07:23 GMT   |   Update On 2022-04-19 07:23 GMT
‘‘பாதுகாப்பற்ற கருக்கலைப்பு தாய் மற்றும் சேய் இறப்புக்கும் வழிவகுத்துவிடும். நோய் பாதிப்புகளுக்கும் ஆளாக்கிவிடும். இவை தவிர்க்கப்பட வேண்டியவை’’ என்று உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.
‘ஐக்கிய நாடுகள் மக்கள் தொகை நிதியம்’ என்ற அமைப்பு உலக அளவில் நடைபெறும் திட்டமிடப்படாத கருக்கலைப்பு பற்றிய ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளது. அதன்படி, 12 கோடி கருக்கலைப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தினமும் சராசரியாக 3 லட்சத்து 31 ஆயிரம் கருக்கலைப்புகள் நிகழ்கின்றன. இந்தியாவில் 67 சதவீதம் கருக்கலைப்புகள் பாதுகாப்பற்ற சூழலில் நிகழ்வதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. கருக்கலைப்பு தொடர்பான சிக்கல்களால் ஒவ்வொரு நாளும் 8 பெண்கள் உயிரிழக்கிறார்கள்.

கருத்தடை முறைகளை பயன்படுத்தாத காரணத்தாலோ, வலுக்கட்டாயமான கற்பழிப்பு காரணமாகவோ இது நிகழலாம். திட்டமிடாத கருக்கலைப்பை பொறுத்தவரை 7 கருக்கலைப்புகளில் ஒரு கருக்கலைப்பு இந்தியாவில் நடக்கிறது.

‘‘திட்டமிடாத கர்ப்பம் பாலின பாகுபாட்டின் காரணமாகவும் நிகழ்கிறது. நவீன கருத்தடை முறைகள், கருத்தடை சாதனங்கள் இருந்தும் அதனை கையாளுபவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. உலகளவில், கர்ப்பத்தை தவிர்க்க விரும்பும் பெண்களில் 25 கோடி பேர் கருத்தடை சாதனங்களை பயன் படுத்துவதில்லை’’ என்றும் ஐக்கிய நாடுகள் மக்கள் தொகை நிதியத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

‘‘பாதுகாப்பற்ற கருக்கலைப்பு தாய் மற்றும் சேய் இறப்புக்கும் வழிவகுத்துவிடும். நோய் பாதிப்புகளுக்கும் ஆளாக்கிவிடும். இவை தவிர்க்கப்பட வேண்டியவை’’ என்று உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக திட்டமிடாத கர்ப்பங்கள் அதிகரித்துள்ளன. இதன் விளைவாக 1 கோடியே 56 லட்சம் கருக்கலைப்புகள் ஆபத்தான நிலையில் செய்யப்பட்டுள்ளன என்றும் புள்ளி விவரம் கூறுகிறது. 2018-ம் ஆண்டில், இந்தியாவில் கருக்கலைப்பு தொடர்பான பாதிப்புக்கு ஆளாகி 13 பெண்கள் இறந்தனர்.

கொரோனா தொற்று காரணமாக இந்த எண்ணிக்கை சற்று அதிகரித்தது. கடந்த 50 ஆண்டுகளாக இந்தியாவில் கருக்கலைப்பு சட்டப்பூர்வமாக இருந்த போதிலும் அது பற்றிய விழிப்புணர்வு போதுமான அளவு இல்லாத நிலையே நீடிக்கிறது. பாதுகாப்பற்ற கருக்கலைப்பு காரணமாக தாய்-சேய் உயிரிழக்கும் அவலமும் நிகழ்கிறது.

பாலியல் கல்வி பற்றிய புரிதலும் இல்லாத நிலை இருக்கிறது. குடும்ப கட்டுப்பாடு பற்றிய விழிப் புணர்வை கூட சுகாதார பணியாளர்கள் கிராமப் புறங்களில் மேற்கொள்வதற்கு இயலாத நிலை இருக்கிறது. பாலியல் கல்வி, குடும்ப கட்டுப்பாடு பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் சுகாதார பணியாளர்கள் தாக்கப்படும் சூழலும் நிலவுகிறது.
Tags:    

Similar News