உள்ளூர் செய்திகள்
லேப்-டாப், செல்போன் பெற்ற எம்.எல்.ஏ.க்களுக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆசி வழங்கிய காட்சி.

ரங்கசாமியிடம் ஆசி பெற்று லேப்டாப்-கம்யூட்டர், செல்போன் வாங்கி சென்ற எம்.எல்.ஏ.க்கள்

Published On 2022-01-29 03:58 GMT   |   Update On 2022-01-29 03:58 GMT
லேப்டாப்-கம்யூட்டர், செல்போனை வாங்கி சென்ற எம்.எல்.ஏ.க்களுக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆசி வழங்கினார்.
புதுச்சேரி:

புதுவை சட்டமன்றத்துக்கு மக்களால் தேர்வான 30 எம்.எல்.ஏ.க்களும், 3 நியமன எம்.எல்.ஏ.க்கள் என 33 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.

புதுவை சட்டப்பேரவையில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் அலுவ லகங்கள் இயங்கி வருகிறது. 

இந்த நிலையில் எம்.எல்.ஏ.க்களுக்கு லேப்டாப், கம்யூட்டர், செல்போன், போட்டோ காப்பியர், பிரிண்டர், மேஜை, நாற்காலி, சோபா செட், அலமாரி மற்றும்  உதவியாளர் அமர மேஜை மற்றும் நாற்காலி மற்றும் பொதுமக்கள் அமர்வதற்கு நாற்காலிகள் போன்ற உபகரணங்கள் ரூ.2½ கோடி செலவில் சட்டமன்ற செயலகத்தால் வாங்கப்பட்டது‌.  அவைகளை எம்.எல்.ஏ.க்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி சட்டசபை வளாகத்தில் நடந்தது.  முதல்-அமைச்சர் ரங்கசாமி சபாநாயகர்  ஏம்பலம் செல்வம் முன்னிலையில் எம்.எல்.ஏ.க்களுக்கு வழங்கினார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் லட்சுமி நாராயணன், துணை சபாநாயகர்   ராஜவேலு, அரசு கொறடா  ஏ.கே.டி.ஆறுமுகம், எம்.எல்.ஏ.க்கள்  நாஜிம்,  கல்யாணசுந்தரம், விவிலியன் ரிச்சர்ட்ஸ்,  நாக.தியாகராஜன் ஆகியோர் இந்த பொருட்களை பெற்றனர்.

மின்சாதன பொருட்களை பெறும் முன்பு எம்.எல்.ஏ.க்கள் முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் ஆசி பெற்று பொருட்களை வாங்கி சென்றனர். முதல்-அமைச்சர் ரங்கசாமியும் எம்.எல்.ஏ.க்கள் தலையில் கை வைத்து ஆசி வழங்கி அனுப்பினார்.
Tags:    

Similar News