ஆட்டோமொபைல்
பிகாஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

விரைவில் இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்யும் பிகாஸ்

Published On 2021-07-31 08:26 GMT   |   Update On 2021-07-31 08:26 GMT
பிகாஸ் நிறுவனம் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்பட்ட எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.


பிகாஸ் (BGauss) நிறுவனம் 2021 நான்காவது காலாண்டில் இரண்டு எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த ஸ்கூட்டரின் டிசைன், வடிவமைப்பு, உற்பத்தி அனைத்துமே இந்தியாவில் உள்ள பிகாஸ் குழுவினராலேயே மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. 

புதிய வாகனங்கள் மூலம் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த பிகாஸ் திட்டமிட்டுள்ளது. தனித்துவம் மிக்க புது எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை உற்பத்தி செய்யும் நோக்கில் சக்கனில் செயல்பட்டு வரும் உற்பத்தி ஆலையை பிகாஸ் மாற்றி அமைத்து இருக்கிறது. 



புதிய வாகனங்கள் நீண்ட தூரம் செல்லும் வகையிலும், அசத்தல் தோற்றம், சிறப்பான பாதுகாப்பு மற்றும் செயல்திறன் வழங்கும் வகையிலும் இருக்கும். இந்திய சந்தையின் முதல் மற்றும் இரண்டம் தர நகரங்களில் பிளாக்‌ஷிப் ஸ்டோர் மூலம் விற்பனை மையங்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த பிகாஸ் திட்டமிட்டு உள்ளது.

தற்போது நாடு முழுக்க 13 விற்பனை மையங்களை பிகாஸ் கொண்டிருக்கிறது. இந்த ஆண்டு தீபாவளி சமயத்தில் இதனை 35 ஆகவும் 2022 மார்ச் மாதத்திற்குள் 100 விற்பனை மையங்களை திறக்கவும் பிகாஸ் திட்டமிட்டு இருக்கிறது. 

Tags:    

Similar News