ஆன்மிகம்
திருநாகேஸ்வரம் நாகநாதர் கோவில்

திருநாகேஸ்வரம் நாகநாதர் கோவிலில் 1-ந் தேதி ராகு கேது பெயர்ச்சி வழிபாடு

Published On 2020-08-24 10:04 GMT   |   Update On 2020-08-24 10:04 GMT
திருநாகேஸ்வரம் நாகநாதர் கோவிலில் ஆண்டுதோறும் ராகு பெயர்ச்சி வழிபாடு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான ராகு கேது பெயர்ச்சி வருகிற 1-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து தென்கிழக்கில் காரைக்கால் செல்லும் நெடுஞ்சாலையில் 6 கிலோ மீட்டர் தொலைவில் திருநாகேஸ்வரத்தில் நாகநாதர் கோவில் உள்ளது. ராகு தலமான கோவிலை ஒட்டி மட விளாகமும், அடுத்து 4 வீதிகளும் உள்ளன. நான்கு திசைகளிலும் நான்கு கோபுர வாசல்கள் அழகிய சிற்பங்களுடன் உள்ளன. கோவில் மதில் சுவர் களை அடுத்து பெரிய பிரகாரம் உள்ளது. வட புறம் பூந்தோட்டம் உள்ளது. கிழக்கு கோபுர வாசலை அடுத்து விநாயகர் கோவில், பலிபீடம், நந்தி மண்டபம், கொடி மரம் ஆகியவை உள்ளன. வடக்கு புறத்தில் தேர் வடிவில் நூற்றுக்கால் மண்டபம் உள்ளது. கோபுர வாசலையொட்டி பெரிய பிரகாரமும் அதன் பக்கச்சுவர்களை ஒட்டி திருச்சுற்று மண்டபமும் உள்ளது.

பெரிய பிரகாரத்தின் தென் மேற்கு மூலையில் ராகு சன்னதி உள்ளது. ராகு சில இடங்களில் மேன்மை பெற்று விளங்கிய போதிலும் நாகநாதசாமி கோவிலின் 2-வது பிரகாரம் தென்மேற்கு மூலையில் நாகவல்லி, நாகக்கன்னி ஆகிய தன் இரு தேவிமாருடன் மங்கள ராகுவாக தனிக்கோயிலில் அமர்ந்து காட்சி அளிக்கின்றார். இவருக்கு நிறம் நீலம் ஆகும்.

திருநாகேஸ்வரம் நாகநாதர் கோவிலில் ஆண்டுதோறும் ராகு பெயர்ச்சி வழிபாடு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான ராகு பெயர்ச்சி வருகிற 1-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இந்த ஆண்டு ராகு பகவான் மிதுன ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு வருகிற 1-ந் தேதி மதியம் 2.16 மணிக்கு பெயர்ச்சி அடைகிறார்.இதனை முன்னிட்டு மேஷம், ரிஷபம், கடகம், சிம்மம், கும்பம் போன்ற ராசி உள்ளவர்கள் பரிகாரம் செய்து கொள்ளலாம். 30-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிக்கு ராகு பகவானுக்கு முதல்கால யாகபூஜை தொடங்குகிறது. 31-ந் தேதி(திங்கட்கிழமை) காலை 2-ம் கால யாக பூஜையும் மாலை 3-ம் கால யாக பூஜையும் நடக்கிறது. 1-ந் தேதி காலை 10 மணிக்கு 4-ம் கால யாக பூஜைகள் நடைபெற்று சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.
Tags:    

Similar News