உள்ளூர் செய்திகள்
.

கத்திரி வெயில் முதல் நாளில் தருமபுரி- கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பரவலாக மழை

Published On 2022-05-05 07:46 GMT   |   Update On 2022-05-05 07:46 GMT
கத்திரி வெயில் முதல் நாளில் தருமபுரி- கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது.
தருமபுரி, 

தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இதே போன்று நேற்று மாலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் பரவலாக நேற்று மழை பெய்தது.

நேற்று மாலை 6 மணி நிலவரப்படி, மாவட்டத்தின் அதிகபட்சமாக பென்னாகரம், 20 மி.மீ. மழை பெய்தது. தொடர்ந்து மாரண்டஅள்ளி 20, ஒகேனக்கல் 20, பாப்பி ரெட்டிப்பட்டி 5, பாலக்கோடு 4,6 என மொத்தம் 69.60 மி.மீ. மழை பதிவானது.

இந்நிலையில், கத்திரி வெயில் தொடக்கத்தின் முதல் நாளான நேற்று, வெயிலின் தாக்கம் அதிகரித்த போதும் மதியத்துக்கு மேல் தருமபுரி, நல்லம்பள்ளி உட்பட மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் மழை பெய்ததால், மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஓசூர் சுற்று வட்டாரத்தில் கனமழை பெய்கிறது. நேற்று முன்தினம்  அதிகபட்சமாக தளியில் 50 மி.மீ. மழை பெய்தது. ஓசூரில் நேற்று மாலை 5 மணிக்கு மேல் பலத்த காற்று, இடி-மின்னலுடன் கனமழை கொட்டி தீர்ந்தது.
Tags:    

Similar News