செய்திகள்
பஸ்

பள்ளி-கல்லூரி விடுமுறை: சென்னையில் பஸ் போக்குவரத்து குறைப்பு

Published On 2021-11-27 06:25 GMT   |   Update On 2021-11-27 06:25 GMT
சென்னையில் குறைந்த அளவு பஸ்கள் இயக்கப்பட்டதால் பஸ் நிறுத்தங்களில் பயணிகள் நீண்ட நேரம் காத்து நின்றனர்.
சென்னை:

சென்னையில் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. பலத்த கனமழை விட்டு விட்டு பெய்து வருவதால் மக்கள் நடமாட்டம் குறைந்து உள்ளது.

மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். இதனால் பஸ் போக்குவரத்து குறைக்கப்பட்டு உள்ளது. வழக்கமாக 3000 மாநகர பஸ்கள் இயக்கப்படும். ஆனால் இன்று 2500-க்கும் குறைவான பஸ்களே இயக்கப்பட்டாலும் மக்கள் கூட்டம் இல்லாததால் காலியாக ஓடின. ஒரு சில வழித்தடங்களில் மட்டுமே பயணிகள் அதிகளவு பயணித்தனர்.

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதால் மாணவ-மாணவிகள் வெளியே வரவில்லை. அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களும், அத்தியாவசிய பணியில் ஈடுபட்டவர்கள் மட்டுமே வெளியில் காணப்பட்டனர்.

குறைந்த அளவு பஸ்கள் இயக்கப்பட்டதால் பஸ் நிறுத்தங்களிலும், பயணிகள் நீண்ட நேரம் காத்து நின்றனர். வழக்கமான கால நேரப்படி பஸ்கள் இயக்கப்படவில்லை.

ஒரு பஸ்சில் பயணிகள் ஓரளவு அமர்ந்த பிறகுதான் அடுத்த பஸ் இயக்கப்பட்டது. இதனால் ஒவ்வொரு பஸ்சிற்கும் இடைப்பட்ட நேரம் அதிகமானது.

பஸ் நிறுத்தங்களில் 30 நிமிடத்திற்கு மேலாக பயணிகள் காத்து நின்றனர். மாநகர பஸ் சேவை குறைக்கப்பட்டபோதும் மின்சார ரெயில் சேவை குறைக்கப்படவில்லை. முழு அளவில் இயக்கப்பட்டன.

4 மார்க்கங்களிலும் 670 மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டன. மின்சார ரெயில்களிலும் குறைந்த அளவிலேயே பயணிகள் பயணம் செய்தனர்.

Tags:    

Similar News