செய்திகள்
கும்கி யானைகளுடன் வனத்துறையினர் ரோந்து சென்றபோது எடுத்தபடம்.

தொட்டபெட்டா சாலையில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரிப்பு

Published On 2021-10-22 09:42 GMT   |   Update On 2021-10-22 09:42 GMT
ஆட்கள் நடமாட்டம் இல்லாததால் தொட்டபெட்டா சாலையில் காட்டெருமை, கடமான், சிறுத்தைப்புலி போன்ற வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது.
ஊட்டி:

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தொட்டபெட்டா மலைச்சிகரம் கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டது.

ஊரடங்கு தளர்வில் பிற சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டாலும், சாலை பெயர்ந்து இருப்பதால் தொட்டபெட்டா திறக்கப்படாமல் மூடப்பட்டு உள்ளது. 6 மாதங்களாக சாலையில் வாகனங்கள் செல்லாததால் மரத்தில் இருந்து கீழே விழுந்த இலைகள் சாலையில் அப்படியே கிடக்கிறது.

தொடர் மழையால் சில இடங்களில் பாசி படிந்து இருக்கிறது. ஆட்கள் நடமாட்டம் இல்லாததால் தொட்டபெட்டா சாலையில் காட்டெருமை, கடமான், சிறுத்தைப்புலி போன்ற வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. எனினும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லாததால் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்.
Tags:    

Similar News