உள்ளூர் செய்திகள்
தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம்பிடித்து இழுத்த காட்சி.

வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம்

Published On 2022-04-16 10:22 GMT   |   Update On 2022-04-16 10:22 GMT
வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் இன்று நடைபெற்றது
திருச்சி:


மண்ணச்சநல்லூர் அருகே எதுமலையில் அமைந்துள்ள வரதராஜ பெருமாள் கோவில் தேரோ ட்டம் இன்று நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா என கோசங்கள் முழங்க தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

வரதராஜபெருமாள் கோவில் சித்திரை தேர் திருவிழா கடந்த 8 ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் தினமும் இரவு பிரபை வாகனம், யாழிவாகனம், அனுமந்த வாகனம், கருட வாகனம், சேச வாகனம், யானை வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் பெருமாள் புறப்பாடாகி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். 14 ந் தேதி திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. 

அன்று இரவு பெருமாள் புஸ்ப பல்லக்கில் எழுந்தருளி னார். நேற்று இரவு பெரு மாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். தொடர் ந்து வையாளி கண்டருளும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. இதனையொட்டி காலை 8 மணிக்கு பெருமாள் தேரில் எழுந்தளினார். காலை 10.35 மணிக்கு தேர் வடம் பிடிக்கப்பட்டது.

இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு கோவிந்தா கோவிந்தா என கோசங்கள் முழங்க தேரை வடம்பிடித்து இழுத்தனர். திருவிழாவை முன்னிட்டு ஆங்காங்கே பக்தர்களுக்கு நீர்மோர், பானகம், அன்னதானம் வழங்கப்பட்டன. விழாவிற் கான ஏற்பாடுகளை கிராம முக்கியஸ்தர்ள் மற்றும் உபயதாரர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News