தொழில்நுட்பச் செய்திகள்
ஆப்பிள்

இந்த ஆப்பிள் போன்களை இனி சர்வீஸ் செய்ய முடியாது

Published On 2022-03-30 06:10 GMT   |   Update On 2022-03-30 06:10 GMT
ஆப்பிள் பயனர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜி.எஸ்.எம்.ஏ என அழைக்கப்படும் அமைப்பு ஸ்மார்ட்போன்களில் சீரியல் நம்பர்களை சேகரித்து வைக்கும் தளமாக இருக்கிறது. இதில் ஸ்மார்ட்போன்களின் தற்போதைய நிலையும் பதிவு செய்யப்பட்டிருக்கும். அதாவது குறிப்பிட்ட பதிவு எண்ணை உடைய ஒரு ஸ்மார்ட்போன் தொலைந்துவிட்டதா, திருடப்பட்டுவிட்டதா அல்லது முழுதும் பணம் செலுத்தப்படாமல் இருக்கிறதா என்பதை பார்க்கலாம்.

குறிப்பிட்ட ஒரு ஸ்மார்ட்போன் திருடப்பட்டு விட்டது என ஜி.எஸ்.எம்.ஏவிடம் புகார் அளித்தால் அதன் பதிவு எண்ணை கொண்டு அந்த ஸ்மார்ட்போனுக்கு நெட்வொர்க் இணைப்பு எதுவும் கிடைக்காமல் தடுக்க முடியும். திருடப்பட்ட போனை பிறர் ஏமாந்து வாங்காமல் தடுக்கவும் முடியும். இத்தகைய பயன்களுக்காகவே இந்த ஜி.எஸ்.எம்.ஏ உதவுகிறது.

இந்நிலையில் ஜி.எஸ்.எம்.ஏவில் தொலைந்ததாக அல்லது திருடப்பட்டதாக பதிவு செய்யப்பட்ட ஆப்பிள் போன்களை ஆப்பிள் ஸ்டோர்ஸ் அல்லது ஆப்பிளின் அங்கீகாரம் பெற்ற ஆப்பிள் சர்வீஸ் செண்டர்களில், சர்வீஸ் செய்ய முடியாது என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மொபைல் ஜீனியஸ், ஜிஎஸ்.எக்ஸ் சிஸ்டம்ஸ் ஆகியவற்றில் தொலைந்ததாக, திருடப்பட்டுவிட்டதாக பதிவு செய்யப்பட்ட ஆப்பிள் போன்களுக்கும் சர்வீஸ் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை திருட்டு மற்றும் மோசடியில் இருந்து ஆப்பிள் பயனர்களை காப்பாற்றும் என நம்பப்படுகிறது.
Tags:    

Similar News