உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

முன்னாள் படைவீரர்கள் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்

Published On 2022-04-15 07:42 GMT   |   Update On 2022-04-15 07:42 GMT
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக குரூப்4 இளநிலை உதவியாளர், கிராம நிர்வாக அதிகாரி உள்ளிட்ட 7 ஆயிரத்து 301 பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு நடைபெற உள்ளது.
திருப்பூர்:

குரூப்-4 தேர்வுக்கு முன்னாள் படைவீரர்கள் பயிற்சி பெற விண்ணப்பிக்க வருகிற 28-ந்தேதி கடைசி நாளாகும் என்று கலெக்டர் வினீத் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக குரூப்4 இளநிலை உதவியாளர், கிராம நிர்வாக அதிகாரி உள்ளிட்ட 7 ஆயிரத்து 301 பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு நடைபெற உள்ளது. 

இந்த தேர்வில் காலியாக உள்ள மொத்த இடங்களில் 5 சதவீதம் முன்னாள் படைவீரர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் வயது வரம்பில் பொதுப்பிரிவினருக்கு 48 வயதும், மற்ற பிரிவினருக்கு 53 வயது வரையும் சலுகை வழங்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச கல்வி தகுதி 10ம் வகுப்பு தேர்ச்சியாகும்.

இந்த தேர்வில் கலந்து கொள்ள தகுதியான முன்னாள் படைவீரர்கள் வருகிற 28-ந்தேதிக்குள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் குரூப்-4 தேர்வுக்கு முன் பயிற்சி பெற விருப்பமுள்ள முன்னாள் படைவீரர்கள் திருப்பூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பத்தை கொடுக்க வேண்டும். எழுத்துத்தேர்வு வருகிற ஜூலை மாதம் 24-ந் தேதி நடைபெற உள்ளது.

இந்த தேர்வுக்கு விண்ணப்பித்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் பயிற்சி தேவைப்படும் முன்னாள் படைவீரர்கள் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம், அறை எண்.523, 5-வது தளத்தில் இயங்கி வரும் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பித்த விவரம், பயிற்சி பெற விருப்பமுள்ள விவரத்தை விண்ணப்பம் மூலமாக தெரிவிக்க வேண்டும். முன்னாள் படைவீரர்கள் இதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கலெக்டர் தெரிவித்துள்ளார
Tags:    

Similar News