செய்திகள்
அமெரிக்கா கொடி

அமெரிக்கா- தலிபான்கள் இடையே பேச்சுவார்த்தை

Published On 2021-10-09 09:22 GMT   |   Update On 2021-10-09 11:06 GMT
அமெரிக்க அதிகாரிகள் மற்றும் தலிபான்கள் சார்பில் பங்கேற்ற கூடியவர்கள் குறித்து எந்த தகவலும் வெளிப்படையாக தெரிவிக்கப்படவில்லை.
வாஷிங்கடன்:

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க ராணுவம் வெளியேறியதை அடுத்து அங்கு தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். இதையடுத்து அங்கு பெண்கள் பள்ளி, கல்லூரிக்கு செல்லவும், வேலைக்கு வரவும் தடை விதித்துள்ளதாக அங்குள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே அமெரிக்க ராணுவம் வெளியேறியபோது, அமெரிக்கர்கள் அனைவரும் வெளியேறி விட்டதாக கூறப்பட்டது. ஆனால் இன்னும் சில அமெரிக்கர்களும், அமெரிக்க ராணுவத்திற்கு உதவியவர்களும் ஆப்கானிஸ்தானிலேயே இருப்பதாகவும், அவர்களை மீட்க வேண்டும் எனவும் கூறப்பட்டு வந்தது. இதையடுத்து ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கர்களை மீட்பதற்கான முயற்சியில் அமெரிக்கா இறங்கியுள்ளது. அமெரிக்கா தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. இதற்காக உயர் அதிகாரிகள் அடங்கிய குழுவையும் அமைத்துள்ளது. இதேபோல் தலிபான்கள் சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா-தலிபான் தலைவர்கள் இடையிலான பேச்சுவார்த்தை கத்தார் தோஹாவில் இன்றும், நாளையும் என 2 நாட்கள் நடக்கிறது.



இந்த பேச்சுவார்த்தையின் போது, 105 அமெரிக்கர்கள், 95 கீரின் கார்டு ஹோல்டர்ஸ் மற்றும் அமெரிக்க ராணுவத்திற்கு மறைமுகமாகவும், நேரடியாகவும் உதவியவர்களை மீட்பது தொடர்பாக விவாதிக்கப்படுகிறது. இதுதவிர தற்போது ஆப்கானிஸ்தானில் நடைபெற்று வரக்கூடிய தலிபான்கள் ஆட்சியில் பெண்கள் கல்லூரி செல்ல, பணிபுரிய விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் என பல்வேறு விஷயங்கள் குறித்தும் விவாதிக்கப்பட  இருப்பதாக கூறப்படுகிறது. தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய பிறகு முதல் முறையாக அமெரிக்கா-தலிபான்கள் இடையே பேச்சு வார்த்தை நடக்க உள்ளது முக்கியத்துவம் வாய்ததாக பார்க்கப்படுகிறது.

இந்த கூட்டத்தில் பங்கேற்க கூடிய அமெரிக்க அதிகாரிகள் மற்றும் தலிபான்கள் சார்பில் பங்கேற்ற கூடியவர்கள் குறித்து எந்த தகவலும் வெளிப்படையாக தெரிவிக்கப்படவில்லை.

Tags:    

Similar News